பண்டிதர்கள், உபாத்தியாயர்கள், தமிழ்ச் செல்வர்கள்… புராண இதிகாசங்கள் – அதுவும் தமிழர்களுக்குச் சம்பந்த மில்லாததும், தமிழர்களுக்கு இழிவைத் தரக்கூடியதும், தமிழர் முற்போக்கைத் தடுக்கக் கூடியதும், பகுத்தறிவுக்கு ஒவ்வாததுமான விசயங்கள் கொண்ட புராண இதிகாசங் களை – சமய ஆதாரங்கள் போலவும், தேசச் சரித்திரங்கள் போலவும் நம் குழந்தைகளுக்குக் கற்பிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படுகின்றார்களா? இவ்விசயத்தில் இனியா வது தமிழ்ப் பண்டிதர்கள், தமிழ் உபாத்தியாயர்கள், உண்மை தமிழ்ப் பெற்றோர்கள் ஒன்று கூடி, மாநாடு கூட்டி – இம்மாதிரி விசயங்கள் பள்ளிப் படிப்பில் நுழையாமல் இருக்கும்படிச் செய்யக் கூடாதா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’