மயிலாடுதுறை புத்தகத் திருவிழாவில் மயிலாடுதுறை எழுத்தாளர்களுக்கென தனியாக ‘மண்ணின் மைந்தன்’ (அரங்கு எண்: 69) மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கம்பன், கல்கி, சாண்டில்யன், சாமி.சிதம்பரனார், சா.கந்தசாமி, கலி.பூங்குன்றன், விடுதலை இராஜேந்திரன், எம்.எஸ்.உதயமூர்த்தி என 50 க்கும் மேற்பட்ட மண்ணின் மைந்தர்களின் படைப்புகள், 200 க்கும் மேற்பட்ட நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இன்றைய இளம் எழுத்தாளர்களின் நூல்களும் இடம் பெற்றுள்ளது. நாள்தோறும் புதிய புதிய எழுத்தாளர்கள் அரங்கிற்கு வருகை தந்து தங்கள் நூல்களை அளித்த வண்ணம் இருக்கின்றனர். தோழர்கள் அவசியம் காண வேண்டிய அரங்கு!