கணியூரில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

viduthalai
2 Min Read

கணியூரில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை எழுச்சியுடன் நடைபெற்றது
கல்லூரி, பள்ளி மாணவர்கள் பெருமளவில் பங்கேற்றனர்

கணியூர், பிப். 5- தாராபுரம் கழக மாவட்ட திராவிடர் கழகம் நடத்திய பெரியாரியல் பயிற்சிப் பட்டறை கணியூர் ஓம்முருகா திருமண மண்டபத்தில் (4.2.2024) ஞாயிற்றுக்கிழமை மிக எழுச்சியுடன் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை நடைபெற்றது.

திராவிடர் கழக மாவட்டச்செயலாளர் வழக்குரைஞர் ஜெ.தம்பிபிரபாகரன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
தாராபுரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் க.கிருஷ்னன் தலைமையேற்று உரையாற்றினார்.

மாவட்ட துணைத் தலைவர் ச.ஆறுமுகம், பொதுக் குழு உறுப்பினர் கி.மயில்சாமி, பொதுக்குழு உறுப்பினர் புள்ளியான் மாவட்ட துணைச் செயலாளர் நா. மாயவன், மாவட்ட ப.க தலைவர் தி. வெங்கடாசலம். மாவட்ட ப.க.செயலாளர் பு.முருகேசன் மடத்துக்குளம் ஒன்றிய தலைவர் ஜெயபிரகாஷ் மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் ம.தங்கவேல், தாராபுரம் நகர தலைவர் சின்னப்பதாஸ், தாராபுரம் நகர செயலாளர் முத்தரசன், மாவட்ட தொழிலாளர் அணி பொறுப்பாளர் சிவக்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் சு. வினோத்குமார் வழக்குரைஞர் தாராபுரம் சக்திவேல், கணியூர்,முருகேசன் மணி நாகராஜன்,மாரிமுத்து, மாவட்ட இளைஞரணி தலைவர் கி.தென்றல், கணியூர் செல்வராசு, சதீஷ், இனியன் ஆகியோர் முன்னிலையேறு உரையாற்றினார்கள்.

வகுப்புகளும் தலைப்புகளும்

பகுத்தறிவாளர் கழக ஊடகப்பிரிவு மாநில தலைவர் மா.அழகிரிசாமி “தந்தை பெரியார் ஓர் அறிமுகம்” என்ற தலைப்பில் முதல் வகுப்பெடுத்தார்.
திராவிடர் கழக தகவல் தொழில்நுட்ப அணி மாநில ஒருங்கிணைப்பாளர் எழுத்தாளர் வி.சி. வில்வம் “தமிழர் தலைவர் ஆசிரியர் திரு வீரமணி அவர்களின் சாத னைகள்” என்ற தலைப்பில் வகுப்பு எடுத்தார்.

திராவிடர் கழக கிராம பிரச்சார குழு மாநில அமைப் பாளர் முனைவர் க. அன்பழகன் “பார்ப்பன பண்பா£ட்டு படையெடுப்புகள்” என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார்.
டாக்டர் குன்னூர் இரா.கவுதமன் “பேய்யாடுதல் சாமியாடுதல் அறிவியல் விளக்கம்” என்ற தலைப்பில் வகுப்பு எடுத்தார்.
ஈட்டி கணேசன் “மந்திரமா? தந்திரமா? – அறிவியல் விளக்கம்” என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார்.
திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி “தந்தை பெரியாரின் பெண் உரிமை சிந்தனைகள்” என்ற தலைப்பில் வகுப் பெடுத்தார்.
திராவிடர்கழக துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு “பெரியார் தந்தை பெரியாரும் ஜாதி ஒழிப்பும்” என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயிற்சி மாணவர்களிடையே காணொலியில் உரை யாற்றினார்.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் பெரியாரியல் பயிற்சி பட்டறை பொறுப்பாளர் இரா.ஜெயக்குமார் நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தியதுடன். பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டுரையாற்றினார்

மாணவர்களுக்கு பரிசு

வகுப்பை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பெடுத்த மூன்று மாணவர்களை தேர்வு செய்து ஆலமரத்தூர் அபிஷேக் முதல் பரிசும் , தாராபுரம் ஓவியா இரண்டாவது பரிசும்,துங்காவி சஞ்சீவி மூன்றாவது பரிசும் ,கிருஷ் ணாவும் பிரியதர்ஷினி நான்காம் பரிசும் ,வேடப்பட்டி பிரபாகரன் அய்ந்தாம் பரிசும் பெற்ற மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.
பயிற்சியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களும் கழகப் பொறுப் பாளர்களும் குழு ஒளிப்படம் எடுத்து மகிழ்ந்து விடைப் பெற்றனர். ரூ. 9400க்கு கழகப் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *