சென்னை, பிப். 5- சென்னை எண்ணூரில் அமோனியா வாயுக் கசிவு ஏற்படுத்திய கோரமண்டல் உரத் தொழிற்சாலை மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ரூ.5.92 கோடி சுற்றுச்சூழல் இழப்பீடு வசூலிக்க வேண்டும் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
எண்ணூர் கோரமண்டல் உரத் தொழிற்சாலையில் கடந்த டிசம் பர் 26ஆ-ம் தேதி அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது.
இதற்கான காரணத்தை கண் டறிய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் ஆர்.கண்ணன், ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரி யத்தை சேர்ந்த பி.எம்.பூர்ணிமா, அய்அய்டி பேராசிரியர் சங்கர் நரசிம்மன், ஒன்றிய தோல் ஆராய்ச்சி நிறுவன மூத்த விஞ்ஞானி எஸ்.வி.சீனிவாசன் உள் ளிட்ட 7 பேர் கொண்ட தொழில் நுட்பக் குழுவை அரசு அமைத்தது.
இத்தொழில்நுட்பக் குழு தனது விரிவான ஆய்வு மற்றும் ஆலோசனைகளுக்குப் பிறகு எண்ணூர் கடற்கரைக்கு அருகில் உள்ள கோரமண்டல் உரத் தொழிற்சாலையின் கடலுக்கு அடியில் அமோனியா கொண்டு செல்லும் குழாயில் இருந்து அமோ னியா வாயுக் கசிவு ஏற்பட்டது என்று முடிவு செய்துள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக குழாயைச் சுற்றியுள்ள கனமான கிரானைட் பாறைகள் நகர்ந்ததால் குழாயில் சேதம் ஏற்பட்டு அமோ னியா வாயுக்கசிவு ஏற்பட்டி ருக்கலாம் என்று குழுவால் கணிக்கப்பட்டுள்ளது.
‘சேதமடைந்த குழாய்க்கு பதில் புதிய குழாய்களை அதிநவீன கண் காணிப்பு, தானியங்கி கட்டுப்பாடு மற்றும் விபத்து தடுப்பு சாதனங் களுடன் அமைக்கப்பட வேண்டும் கடலில் இருந்து சாலை வழியாக தொழிற்சாலைக்கு அமோனியா வாயு கொண்டு செல்லும் இடத்தில் குழாய்களை பொது மக்கள் யாரும் அணுகா வண்ணம் உரிய பாது காப்பு அமைப்புகளுடன் இருப் பதை தொழிற்சாலை உறுதி செய்ய வேண்டும்’ என்பன உள்ளிட்ட 18 பரிந்துரைகளை இக்குழு தொழிற் சாலைக்கு வழங்கியுள்ளது.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் துக்கு வழங்கப்பட்ட பரிந்துரை யில், “தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு சுற்றுச்சூழல் இழப் பீடாக ரூ.5.92 கோடியை சம்பந்தப் பட்ட தொழிற்சாலை உடனடியாக செலுத்துவதற்கு வாரியம் நட வடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
காற்று (தடுப்பு மற்றும் மாசு கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் வழங் கப்பட்ட நிபந்தனைகளை தொழிற் சாலை செயல்படுத்தாததால் தொழிற் சாலையின்மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பக் குழுவின் மேற்கண்ட அறிக்கையை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அரசிடம் சமர்ப்பித் துள்ளது. குழுவின் பரிந்துரைகளை அரசு ஏற்றுக்கொண்டு, தொழில் நுட்பக் குழுவின் அனைத்துப் பரிந் துரைகளையும் உடனடியாக அமல் படுத்தி, அறிக்கை அளிக்குமாறு தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.