மேட்டூர், பிப். 4- டெல்டா மாவட்டங்களில் பயிரிடப் பட்ட சம்பா பயிர் களை காத்திட, மேட்டூர் அணை யிலிருந்து பாசனத்துக்கு விநாடிக்கு 6,000 கன அடி நீர் இன்று மாலை முதல் திறந்து விடப்பட்டது.
நடப்பாண்டில், வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்ததாலும், நீர் பற்றாகுறையாலும், டெல்டா மாவட்டங்க ளில் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டு வருவ தால், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 30 குழுக்கள் அமைத்து, 298 கிராமங்களில் கள ஆய்வு செய்யப்பட்டது. இந்த குழு அறிக்கையின் படி, திருவாரூர் மாவட்டத் தில் 4,715 ஏக்கர், நாகப் பட்டினம் மாவட்டத்தில் 18,059 ஏக்கர் என 22,774 ஏக்கர் சம்பா பயிர்களை காத்திட, மேட்டூர் அணையில் இருந்து 2 டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்படும் என முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
தற்போது, அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு இன்று காலை 107 கன அடியாகவும், நீர் மட்டம் 70.42 அடியாகவும், நீர் இருப்பு 33 டிஎம்சியாகவும் இருந்தது. மேட்டூர் அணையில் இருந்து நேற்று மாலை 6 மணி முதல் பாசனத்துக்கு விநா டிக்கு 6,000 கன அடி நீர், அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலை யம் வழியாகவும் திறந்து விடப்பட்டது. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு ஜனவரி 28ஆம் தேதி நிறுத்தப்படுவது வழக் கம். அதேபோல, காலதா மதமாக தண்ணீர் திறந் தாலும், கால நீட்டிப்பு செய்யப்படும். ஆனால், டெல்டா பாசன காலம் முடிந்த பிறகு, மீண்டும் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது இதுவே முதல் முறையாகும். அதேபோல், பிப்ரவரி மாதத்தில் தண் ணீர் திறப்பதும் முதல் முறை என்பது குறிப்பிடத் தக்கது.
சம்பா பயிர்களுக்காக மேட்டூர் அணையிலிருந்து 6,000 கன அடி நீர் திறப்பு
Leave a Comment