திருச்சி, பிப்.4 தமிழ்நாடு விளையாட்டு பட்டியலில் ஜல்லிக்கட்டு போட்டியை சேர்ப்பது குறித்து ஆலோ சனை நடைபெற்று வருவ தாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திருச்சியில் நேற்று (3.2.2024) அளித்த பேட்டி: அய்சி ஆர்எஸ் என்பது விளை யாட்டு தொடர்பான பன்னாட்டு கருத்தரங்கம். இது, திருச்சி தேசியக் கல்லூரியில் வரும் 7ஆம் தேதி தொடங்குகிறது. இதில், அமெரிக்கா, அய்ரோப்பியா, உக்ரைன் உள்ளிட்ட 50 நாடுகளில் விளையாட்டு துறை சார்ந்த பலர் கலந்து கொள்கின்றனர். இதனை விளையாட்டு துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ் நாட்டை இந்தியாவின் விளையாட்டு தலை நகரமாக்க முயற்சி எடுத்து வருகிறார். ஜல்லிக்கட்டு போட்டியை தமிழ்நாடு விளையாட்டுப் பட்டியலில் சேர்ப்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். அதன்பிறகுதான் மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய முடியும்.