4.2.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
♦ ரத யாத்திரை என்ற பெயரில் பலரது மரணத்திற்கு காரணமாகி அவர்களது கல்லறைகளின் படிகளில் எல்.கே.அத்வானிக்கு பாரத் ரத்னா விருதா? என அசாதுதின் ஒவைசி கடும் தாக்கு.
♦ இந்தியா கூட்டணியின் உறுதியால் ஜார்க்கண்ட் அரசை திருடும் பாஜவின் சதி முறியடிப்பு: ராகுல்காந்தி பரபரப்பு பேச்சு
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
♦ பொது மக்கள் தங்கள் கருத்தினை இணையம் மற்றும் வாட்ஸ் அப் மூலம் அனுப்பிட திமுக தேர்தல் அறிக்கைக் குழு வேண்டுகோள்.
♦ தமிழ் நாட்டிற்கு உரிய நிதி தராத மோடி அரசைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக நாடாளு மன்ற உறுப்பினர்கள் பிப்ரவரி 8-ஆம் தேதி ஆர்ப் பாட்டம்.
♦ “காந்தியைச் சுட்டுக் கொன்ற பார்ப்பனன் கோட்சே இந்தியாவைக் காப்பாற்றியதற்காகப் பெரு மைப்படுகிறேன்” என முக நூலில் பதிவிட்ட தேசிய தொழில் நுட்பக் கழகம், கோழிக்கோடு பேராசிரியை சைஜா ஆண்டவன் மீது காவல்துறை வழக்கு பதிவு.
♦ மகாராட்டிரா உல்லாஸ் நகர் காவல் நிலையத்தில் சிவசேனா கட்சியைச் சேர்ந்தவரை காவல் அதிகாரிகள் முன்னால் துப்பாக்கியால் சுட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர் கைது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦ “அரசியலுக்காக அல்ல, ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தினால், எத்தனை பட்டதாரிகள் இருக்கிறார்கள் என்பது தெரியும் என்பதற்காகத்தான் நாங்கள் இதற்கு அழுத்தம் கொடுக்கிறோம்; எத்தனை வேலைகள் உள்ளன, வெவ்வேறு சமூகங்களுக்குச் சொந்தமான நிலம் எவ்வளவு… நீங்கள் கொள்கைகளை உருவாக் கலாம். நீங்கள் (அரசு) இதைப் பற்றி மீண்டும் சிந்தியுங்கள். நீங்கள் அதைச் செய்யாவிட்டால், நாங்கள் வந்து செய்வோம்” என்று கார்கே மாநிலங்களவையில் பேச்சு.
♦ “மோடி அரசின் இடைக்கால வரவு-செலவுத் திட்டம் பொருளாதாரத்தின் உண்மையான நிலையின் உண்மையான பிரதிபலிப்பாகவும் இல்லை அல்லது எதிர்கால ஆட்சித் திட்டம் குறித்த எந்த யோசனை யையும் வழங்கவில்லை” என்கிறார் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைப் பேராசிரியர் ஹிமான்சு.
தி இந்து:
♦ இந்த தசாப்தத்தில் இன்னும் நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை எந்த ஒரு சர்வே யாலும் மாற்ற முடியாது என்கிறது ஹிந்து தலையங்கம்.
– குடந்தை கருணா