நவமியில் தொடங்கிய ‘நல்ல காரியம்?’

viduthalai
2 Min Read

கருஞ்சட்டை 

‘‘1927இல் கதர்ப் பணிக்காக காந்திஜி கோவைக்கு வந்தார். கோவை பகுதியில் கதர்ப் பணியைத் தீவிர மாக எடுத்து நடத்தியவர் அய்யாமுத்து.
அவர் இராமகிருஷ்ண வித்யாலயம் என்ற பள் ளிக் கட்டிடத்துக்கு காந்திஜியிடம் அடிக்கல் நாட்ட வேண்டினார்.
காந்திஜியும் ஒப்புக் கொண்டு, முதல் நாள் இரவு தங்கிவிட்டு, மறுநாள் காலை அடிக்கல் நாட்டுவதாகச் சொன்னார். ஆனால், உடன் இருந்த வர்களுக்கு அந்த நாள் பிடிக்கவில்லை. காரணம், முதல் நாள் அஷ்டமி.

மறுநாள் நவமி. நவமியில் நல்ல காரியம் தொடங்குவதை அவ்வளவாக விரும்பமாட்டார்கள். கல்வியாளர் அவினாசிலிங்கம் கூட அய்யாமுத்து விடம் “நவமியில் அடிக்கல் நாட்ட வேண்டாமே” என்றார்.

உடனே அய்யாமுத்து, ‘‘காரியம் ரொம்ப நல்ல காரியம். அதைத் தொடங்கி வைப்பவரோ ரொம்ப ரொம்ப நல்லவர். எதுவும் நடந்து விடாது” என்றாராம்.
ஏற்பாடு செய்தபடியே நவமியில் அடிக்கல் நாட்டினார் காந்திஜி. இன்று கோவையில் பிரகாச மாய் விளங்குகிறது இராமகிருஷ்ண வித்யாலயம்.”

– ஜெ.அன்பு பாலாஜி, திருச்சி
‘தினமணிகதிர்’, 21.7.2013
(தகவல்: த.இராசவன்னியன்)

காந்தியார் ஒருமுறை சாமி தரிசனத்துக்காக காசிக்குச் சென்றார். அங்கே அவர் கண்ட காட்சிகள் அதிர்ச்சியைத் தந்தன.

“அமைதி இல்லை. எங்கு பார்த்தாலும் ஈக்கள். தட்சணை கொடுக்க மனம் வரவில்லை. ஆனாலும், ஒரு தம்படி கொடுத்தேன். அந்தப் பண்டாவுக்குக் கோபம். தம்படியை வீசி எறிந்துவிட்டார்.

‘நீ நரகத்துக்குப் போவாய்!’ என்று சபித்தார்.

‘மகராஜ்! என்னது எப்படியானாலும் சரி, ஆனால், இப்படி எல்லாம் பேசுவது உங் களைப் போன்ற வகுப்பினருக்குத் தகாது. விருப்பமிருந்தால் அந்தத் தம்படியை எடுத்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் அதையும் நீங்கள் இழந்துவிடுவீர்கள்’ என்றார் காந்தியார்.”

‘போய்த் தொலை. உன் தம்படி எனக்கு வேண்டாம்!’ என்று கூறி காந்தியாரை வசை மாரி பொழிந்தான் பண்டா.

‘பிராமணர் ஒரு தம்படியை இழந்தார். எனக்கு ஒரு தம்படி மிச்சம் என்று என்னைப் பாராட்டிக் கொண்டேன்!’ என்கிறார் காந்தியார்.
காந்தியாரைத் திருப்பிக் கூப்பிட்டான் அந்தப் பண்டா. ‘அது சரி, அந்தத் தம்படியை இங்கு கொடுத்துவிட்டுப் போ! உன் தம்படியை வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டால் உனக்குக் கெடுதல் ஆகிவிடும்.’ என்றான் பண்டா.

இதுபற்றி தனது சுயசரிதையில் காந்தியார் எழுதியுள்ளார்.
இந்தக் காசிக்குத்தான் பல கோடி ரூபாய்களைக் கொட்டி புனருத்தாரணம் செய்கிறார் மோடியும் – அவர்தம் சங் பரிவார்களும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *