சென்னை,பிப்.3– தமிழ்நாடு இளை ஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும் தி.மு.க. இளைஞரணி மாநில செய லாளருமான உதயநிதி ஸ்டாலின் சமூக வலைத்தப்பதிவில் குறிப்பிட் டுள்ளதாவது,
ஒன்றிய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் மீண்டும் தமிழ்நாட்டை பாசிஸ்ட்டுகள் புறக் கணித்திருக்கிறார்கள். எவ்வளவு மரியாதை கொடுத்தாலும், நிதி மட்டும் கொடுக்கவே மாட்டோம் என்கிற அவர்களின் நிலைப் பாட்டை வன்மையாகக் கண்டிக்கி றோம். இந்தியாவில் வேலைவாய்ப் பைப் பெருக்க – பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த – மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்க எந்த திட்டங் களையும் அறிவிக்காமல், 2047இல் இந்தியாவை வல்லரசு ஆக்குவோம் என்று மீண்டும் ஒருமுறை அல்வா கிண்டியுள்ளார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியா வல்லரசாவதற்கான இலக்கை தள்ளி வைத்துக் கொண்டே போவது மட் டும் தான் பாசிஸ்ட்டுகளின் சாதனை.
இடைக்கால நிதிநிலை அறிக்கை யில் கைவிரித்த பாசிஸ்ட்டுகளை, இனி எக்காலத் துக்கும் எழ முடியாத அளவுக்கு இந்திய மக்கள் வீழ்த்துவது உறுதி. இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் மீண்டும் தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதா? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாடல்
Leave a Comment