பிப்ரவரி 13இல் காங்கிரஸ் தலைவர் கார்கே சென்னை வருகை தொகுதிப் பங்கீடு பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை

1 Min Read

சென்னை, பிப். 3- அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே பிப்.13ஆ-ம் தேதி சென்னை வருகிறார். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்கிறார்.
மக்களவை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியை முதன்மையாக கொண்டு ‘இண்டியா’ கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தி.மு.க. உள்ளிட்ட 20-க்கும் மேற் பட்ட கட்சிகள் இணைந்துள்ளன.
இக்கூட்டணியின் தலைவராக காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் பல்வேறு மாநிலங்களில் உள்ள கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து தொகுதி உடன்பாடு தொடர்பாக பேசி இறுதி செய்யும் பணியில் ஈடுபட் டுள்ளார்.
‘இண்டியா’ கூட்டணியில் தமிழ் நாட்டை பொறுத்தவரை, தி.மு.க. தலைமையில் கூட்டணிக் கட்சிகள் இணைந்துள்ளன. தி.மு.க. சார்பில் கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தைக்காக பொருளாளர் டி.ஆர்.பாலு நாடாளுமன்ற உறுப் பினர்.
தலைமையில் குழு அமைக்கப் பட்டுள்ளது.

இக்குழுவுடன், கடந்த மாத இறுதியில் காங்கிரஸ் சார்பில் முகுல் வாஸ்னிக், தமிழ்நாடு காங் கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். வரும் 9ஆ-ம் தேதி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத் தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் காங் கிரஸ் 13 தொகுதிகள் வரைகேட்பதாக கூறப்படுகிறது. இந்த முறை ம.நீ.ம. கட்சியை கூட்டணியில் சேர்ப்ப தாலும், கூடுதல் இடங்களில் திமுக போட்டியிட விரும்புவதாலும் தமிழ்நாட்டில் 7, புதுச்சேரியில் 1 என 8 தொகுதிகளை தருவதாக தி.மு.க. தெரிவித்துள்ளது.
இந்தச் சூழலில், காங்கிரஸ் தலைவர் கார்கே 13ஆ-ம் தேதி தமிழ்நாடு வருகிறார். சென்னை யில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் அவர், தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசு கிறார். இந்த சந்திப்பின்போது, காங்கிரஸுக்கான தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுவிடும். அதன் பிறகு, போட்டியிடும் தொகுதிகள் பேசி முடிவெடுக்கப்படும் என்று இரு கட்சிகளின் வட்டாரங்களும் தெரிவித்தன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *