கிருட்டினகிரி மாவட்டத் திராவிடர் கழக மேனாள் தலைவரும், மேனாள் விடுதலை முகவருமான சுயமரியாதை சுடரொளி காவேரிப்பட்டணம் மு.தியாகராசன் அவர்களின் 9-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (01.02.2024) காவேரிப்பட்டணம் அன்பு ஆப்செட்டில் அவரது படத்திற்கு திராவிடர் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் தலைமைக்கழக அமைப்பாளர் கோ.திராவிட மணி, மாவட்டத் துணைச் செயலாளர் தி.கதிரவன், ஒன்றியத் தலைவர் பெ.செல்வம், மேனாள் ஒன்றியத் தலைவர் சி.சீனி வாசன், மேனாள் மாவட்ட இளைஞரணி செயலாளர் வே.புக ழேந்தி, மேனாள் ஒன்றிய அமைப்பாளர் சி.இராசா, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் பூ. இராசேந்திர பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
காவேரிப்பட்டணம் மு.தியாகராசன் 9ஆம் ஆண்டு நினைவுநாள்
Leave a Comment