அந்த லேடி கேட்டார், “நீங்க எதுக்கு டாக்டர் உங்க நேரத்தை வேஸ்ட் பண்ணி பொது விஷயங்களை பத்தி பேசிக்கிட்டு எழுதுக்கிட்டு இருக்கீங்க? இதனால எல்லாம் யாரும் திருந்துவாங்கன்னு நினைக்கிறீங்க?” என்று என்னை கேலி செய்தார். அவருக்கு தெரிந்த வேறொரு ஆண் மனநலமருத்துவரை பற்றி சொன்னார், “அவரு ஹிந்துத்வாவை ஆதரிக் கிறாரு. முஸ்லிம் நடத்துற கடையில நாம சாப்பிடக்கூடாதுனு சொல்லுறாரு. நீங்களும் தான் சைக்கியாட்ரிஸ்ட், நீங்க முஸ்லிம்களுக்கு சப்போர்ட் பண்ணு றீங்க…. ஒண்ணும் புரியல!” என்றார்.
நான் சொன்னேன், “1925இல் இரண்டு பெரிய இயக்கங்கள் உருவாயின.
ஒன்று ஒரு டாக்டர் உருவாக்கியது. சாதா டாக்டர் இல்லை, பிரிட்டிஷ் முறைப்படி படித்து இங்கிலிஷ் மெடிசன் பட்டம் வாங்கிய டாக்டர் ஆரம்பித்த இயக்கம் ஒன்று.
அதிகம் படிக்காத ஒரு சாமானியன் ஆரம்பித்த இயக்கம் இன்னொன்று.
டாக்டர் ஆரம்பித்த இயக்கம், இந்து ராஜ்ஜியம், இந்து மேலாதிக்கம் பேசியது. பாமரன் ஆரம்பித்த இயக் கம், “அறிவு விடுதலையே எங்கள் குறிக்கோள்” என்றது.
இதற்கு பல தசாப்தங்களுக்கு பிறகு நான் பிறந்தேன். என் அம்மா ஒரு பக்திப் பழம். எங்கள் வீட்டில் அரசியல், சமூகம் மாதிரி பெரிதா யாரும் பேசியதில்லை. ஒரு கிளீன் ஸ்லேட் மனதுடன் இருக்கும் எனக்கு இப்போது இரண்டு ஆப்ஷன்கள்:
1) டாக்டர் ஆரம்பித்த இயக்கம், தொடந்து பரவி, பள்ளிப் பருவம் முதல் மாணவர்களை cultivate செய்து இயக்கத்திற்கு உட்படுத்தியது.
2) பாமரன் ஆரம்பித்த இயக்கம், யாரையும் இயக்க ரீதியாய் cultivate செய்யாமல் மானாவாரியாய் விட்டது.
இந்த இரண்டில் நான் எதை தேர்வு செய்வது?
யார் ஆரம்பித்த இயக்கம் என் பதை விட, ஒரு பெண்ணாய் எனக்கு எது survivalளுக்கு fitடான இயக்கம் என்று நான் கூட்டி கழித்து பார்க்கிறேன்.
டாக்டர் ஆரம்பித்த இயக்கம், மத அடிப்படைவாதம் பேசுகிறது.
-இவர்கள் தான் பிளேக் நோயை ஒழிக்க எலிகளை அழிக்க வேண்டும் என்ற போது, எலி விநாயகரின் வாக னம், அதை கொல்லக்கூடாது என்று மருத்துவர்களை தடுத்து, சில மில் லியன் மனிதர்களை காவு கொடுத் தார்கள்!
-இவர்கள் தான் சதி ஏறுவதை ஆதரித்தவர்கள்
– இவர்கள் தான் பாலிய விவாக தடை சட்டத்தை எதிர்த்தவர்கள்
– இவர்கள் தான் தேவதாசி முறையை ஆதரித்தார்கள்
-இவர்கள் தான் பெண்ணின் சொத்துரிமையை எதிர்த்தவர்கள்
– இவர்கள் தான் பெண்ணுக்கு வங்கி கணக்கு கூட இருக்க கூடாது என்றவர்கள்
-இவர்கள் தான் ஆணுக்குப் பெண் அடங்கி போவதே நம் தர்மம் என்ற வர்கள்!!
இதற்கு நேரெதிராய் அந்த சாமா னியன் ஆரம்பித்த இயக்கம், பெண்ணை ஒரு சரிநிகர் சமானமான பிரஜை என்கிறது. பெண்களுக்கான எல்லா உரிமைக்காகவும் போராடியது. விதவை மறுமணம், கல்வி உரிமை, சொத்துரிமை. பெண்களுக்கான கல்வி கூடம், அபலை இல்லம், அனாதை ஆசிரமம் என்று women friendlyயான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது….
இது இப்படி இருக்க, கொஞ்சமாவது அறிவிருக்கும் பெண் இந்த இரண்டு இயக்கத்தில் எதை தேர்வு செய்வாள்?
டாக்டர் ஹெட்கேவர் ஆரம்பித்த பிற்போக்கான ஆர்.எஸ்.எஸ். எனும் பெண்ணடிமை அமைப்பா?
அல்லது பெரியார் எனும் பெண் ணியவாதி ஆரம்பித்த முற்போக்கான சுயமரியாதை அமைப்பா?”
நான் இவ்வளவு பேசியதும் அந்த லேடி எழுந்து என் கையை குலுக்கி, “இதைப் பத்தி இனிமே நானும் பேசுறேன்” என்றார் அவர்.
– மருத்துவர் ஷாலினி முகநூல் பதிவு