விசாரணைக்கு ஆஜராகாமல் தப்பிக்கும் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்

2 Min Read

புதுச்சேரி, அக்.11  பகுஜன் சமாஜ் கட்சியின் டேனிஷ் அலியை நோக்கி வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான கருத்தை பேசி சர்ச்சையில் சிக்கியிருந்த பா.ஜ.க. நாடாளு மன்ற உறுப்பினர் ரமேஷ் பிதுரி, நாடாளுமன்ற உரிமை மீறல் குழு முன்பு நேற்று (அக்.10) ஆஜராக வேண்டிய நிலையில், முன் தீர்மானிக்கப்பட்ட நிகழ்ச்சிகளைக் காரணம் காட்டி, அவர் ஆஜராகவில்லை. தற்போது அவர், சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் கட்சிக் கான பிரச்சார வேலைகளில் தீவிரமாக உள்ளார். 

ரமேஷ் பிதுரி நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய டோக் மாவட்ட பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப் பட்டுள்ளார். ராஜஸ்தானில் நவம்பர் 23 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. டோங்க் மாவட் டத்தில் குஜார் சமூகத்தினர் அதிகம் உள் ளனர். சச்சின் பைலட் இதே சமூகத்தைச் சேர்ந்தவரே. ரமேஷ் பிதுரியும் குஜார் சமூ கத்தைச் சேர்ந்தவர் என்பதால் வாக்குகளை பெறுவதற்கு பிதுரியின் நியமனம் உதவும் என்று பாஜக நம்புகிறது. ராஜஸ்தான் மாநிலம், டோங்க் மாவட்டத்தின் பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர். ரமேஷ் பிதுரி கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். இது ‘வெறுப்பு பேச்சுக் கான வெகுமதி’ என்று எதிர்க்கட்சிகள் கடு மையாக விமர்சனம் செய்திருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் கடந்த 21 ஆம் தேதி நடை பெற்றபோது மக்களவையில் சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது குறுக்கிட்ட பகுஜன் சமாஜ் நாடாளுமன்ற உறுப்பினர் டேனிஸ் அலியை தீவிரவாதி என்று கூறி தகாத வார்த்தைகளால், பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பிதூரி திட்டினார். இதற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மக் களவையில் வருத்தம் தெரிவித்தார். ரமேஷ் பிதூரியின் பேச்சு அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. 

அவையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பிதாரி அநாகரீகமாக பேசியதற்குக் கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சி நாடாளு மன்ற உறுப்பினர்கள், இந்த விவகாரத்தை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

அவையில் ரமேஷ் பிதூரி பேசிக் கொண்டிருந்தபோது, இடையில் குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டேனிஸ் அலி, ரமேஷ் பிதூரியை ஆவேசப்பட தூண்டினார் என பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே உள்ளிட்ட பலரும் புகார் தெரிவித்திருந்தனர். இந்தப் புகார்களை பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் குமார் சிங் தலைமையிலான உரிமை மீறல் குழுவுக்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *