பொதுத்துறை வங்கிகளில் தொழிலாளர் நல சட்டங்களுக்கு எதிராக ஒப்பந்த தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதை தடை செய்ய வேண்டும்!
திருச்சி, அக்.11- பொதுத்துறை வங்கி களில் தொழி லாளர் நல சட்டங்களுக்கு எதிராக, ‘அவுட் சோர்சிங்’ மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணியில் அமர்த் துவதை ஒன்றிய அரசு தடை செய்ய வேண்டும் என ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் மேனாள் தொழிற் சங்க தலைவர்கள் கூட்டமைப்பு (AFCCOM)
வலியுறுத்தியுள்ளது.
இக்கூட்டமைப்பின் ஏழாவது பொதுக்குழு கூட்டம் திருச்சி அஜந்தா விடுதி அரங்கில் 8.10.2023 அன்று இந்த அமைப்பின் தலைவர் எஸ்.பி.இராமன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட் டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அண்மையில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலமாக பதிலளித்த ஒன்றிய நிதித்துறை துணையமைச்சர் டாக்டர் பகவத் கரத் அவர்கள், பொதுத்துறை வங்கிகளில் 98 சதவிகித காலி இடங்கள் நிரப்பப்பட்டு விட்டதாக அளித்த உண்மைக்கு மாறான பதில் வங்கித் துறையில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கி உள்ளது.
இந்திய ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் ஒப்பந்த அடிப்படைமயில் எழுத்தர்கள், பதி வறை காப்பாளர்கள், துணை நிலை ஊழியர்கள் உள்ளிட்டோரை மிகவும் சொற்ப ஊதியத்தில் பணியில் அமர்த் தும் தொழிலாளர் விரோத போக்கை நிறுத்த ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுப்பதோடு, அரசின் சட்டங்கள் மற்றும் வங்கித் துறையில் நடைமுறையில் உள்ள ஒப்பந்தங்களை பொதுத்துறை வங்கிகள் கடைப் பிடிப் பதை ஒன்றிய தொழிலாளர் நலத்துறை மூலம் அனைத்திந்திய அளவில் ஆய்வு செய்ய ஒன்றிய அரசு முன்வர வேண்டும்.
நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனையில் இருக்கும் குற்றவியல் நீதி சட்டத் திருத்தங்களை நாடு தழுவிய அளவில் பொது விவாதத்துக்கு உட்படுத்த வேண்டும். மணிப்பூர் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த ஒன்றிய அரசு முன்வர வேண்டும்.
இந்திய ஸ்டேட் வங்கி ஓய்வூதியர்களின் சுகாதார காப்பீட்டு பிரிமியத்தை இவ்வங்கி நிர்வாகமே முழுமையாக ஏற்க முன்வர வேண்டும். இவ்வங்கியின் மருந்தகங் களில் தகுதியான மருத்துவர் பரிந் துரைக்கும் தரமான மருந்துகளை எல்லா வங்கி நாள்களிலும் வழங்க வங்கி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக இப்பொதுக்குழு கூட்டத் திற்கு பொதுச் செயலாளர் எம்.கே.மூர்த்தி, பொருளாளர் திருச்சி என்.சுப்பிரமணி யன், துணைத் தலைவர் டி.வி.சந்திரசே கரன், துணைச் செயலாளர் மதுரை எம்.முருகையா. இவ்வங்கியின் மேனாள் பொதுச் செயலாளர் டி.சிங்காரவேலு ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில துணை பொரு ளாளர் பூமிநாதன், திருச்சி சந்திரா கில்பர்ட், திருவாரூர் பாண்டுரங்கன், புதுச்சேரி எஸ்.கருணாகரன், கோவை எம்.ரகுநாதன், வேலூர் லோகநாதன், மதுரை பரவை பாலசுப்பிமணியன், நாகர்கோயில் அகமது உசைன் ஆகி யோர் பங்கேற்று சிறப்பித்தனர்