சென்னை, பிப் .2 புதிய வாக்காளர்களாகச் சேர்க் கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்கா ளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுஅஞ்சலில் அனுப்பி வைக்கப் படும் என்று தலைமை தேர்தல் அதி காரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார். இது குறித்து, செய்தியாளர் களிடம் அவர் நேற்று (1.2.2024) கூறியதாவது:
உதவி தேர்தல் நடத் தும் அலுவலர்களாக உள்ள 250-க்கும் மேற் பட்டவர்கள், மண்டல வாரியாகப் பிரிக்கப்பட் டுள்ளனர். இவர்களில் மதுரை, திருச்சி, கோவை பகுதி களைச் சேர்ந்த வர்களுக்கு ஏற்கெனவே பயிற்சி அளிக்கப்பட்டு விட்டது. அதேபோல், சென்னை மாநகராட் சியின் ரிப்பன் மாளிகை யில் 2 பிரிவினருக்கு பயிற்சி அளிக்கப்பட் டுள்ளது. இறுதியாக உள்ள ஒரு பிரிவினருக்கு பிப்.5 முதல் 9-ஆம் தேதி வரை பயிற்சி அளிக்கப் படும்.
இதைத்தொடர்ந்து, அடுத்த நிலையில் உள்ள வர்களுக்கு மாவட்டங் களில் அவர்கள் பயிற்சி அளிப்பார்கள். அதே போல், நாடு முழுவதும் உள்ள தேர்தல் தொடர் பான காவல்துறை பொறுப்பு அதிகாரி களுக்கு டில்லியில் தேர் தல் ஆணையம் சார்பில் பயிற்சி அளிக்கப்படு கிறது. இதில், செலவினம் தொடர்பான முக்கியத் துவம் பெற் றதாக உள்ள தமிழ்நாட் டின் சார்பில் நானும், சட்டம் – ஒழுங்கு தொடர் பான முக்கியத் துவம் பெற் றதாக உள்ள மேற்குவங்க மாநிலத்தின் தலைமை தேர்தல் அதி காரியும், மாநி லங்களில் இருந்து பங்கேற் கும் காவல்துறை தலைவர் அல்லது காவல்துறை கூடு தல் தலைமை இயக்குநர் நிலையிலான அய்.பி.எஸ் அதிகாரி களுக்கு பயிற்சி அளிக்க உள்ளோம்.
நாடாளுமன்றத் தேர் தலுக்குப் பயன்படுத்தப் படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் முதல்கட்ட சரிபார்த்தல் முடிக்கப் பட்டு தயார் நிலையில் உள்ளன. தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட தும், அடுத்த கட்டமாக சரிபார்க்கும் பணிகள் நடைபெறும். தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹூ தெரிவித்தார்.