இராம ராஜ்யம் என்பது எப்படி இருக்கும்?
வால்மீகி மூல இராமாயணத்தில் உள்ளதுபடி
– “ஆரியக்கூலி” கம்பர் மறைத்த உத்தரகாண்டம் இதோ:
சருக்கம் 73 – அகால மரணம்
ப்ரஸ்த2£ப்ய து ஸ ல்த்ருக்4நம் ப்ராத்ருப்4யாம் ஸஹராக4வ |
ப்ரமுமோத2 ஸுகீ2 ராஜ்யம் த4ர்மேண பரிபாலயந் ||
இப்படிச் சத்ருக்கனனை மதுபுரிக்கு அனுப்பி, ராமன் சகோதரர்களுடன் தர்மமாய் பிரஜாபாலனம் செய்து கொண்டு மகிழ்ந்தார். சில தினங்களுக்குப் பிறகு, நாட்டுப் புறத்தில் வசிக்கும் ஒரு கிழப் பிராம்மணன் உயிரிழந்த தன் புத்திரனை எடுத்துக்கொண்டு அரண்மனை வாசலில் வந்து பலவிதமாய் புலம்பினார். புத்திர சோகத்தாலும் துக்கத்தாலும் மெய்மறந்து, “ஐயோ! குழந்தாய்! நான் பூர்வ ஜன்மத்தில் என்ன பாபம் செய்தேனோ? என் ஒரே குழந்தை, எனக்கு முன் மரணமடையப் பார்க்கும் விதி நேர்ந்ததே? ஐயோ! உனக்கு இன்னும் பதினான்கு வயதாகவில்லையே! லோகத்தின் சுகங்களை அனுபவிக்காமல் அகாலத்தில் காலனுடைய பாசத்தால் கட்டுப்பட்டு என்னையும் துக்க சமுத்திரத்தில் தள்ளினாயே! உன்னை இழந்து நானும் உன் தாயும் பிழைத்திருப்போமா? சில தினங்களில் நாங்களும் மரணமடைவோம்.
பிராமணனது அழுகை:
இந்தக் கஷ்டம் எனக்கு நேரக் காரணம் யாதொன்றையும் அறியேன்; நான் பொய் சொன்னதில்லை; ஒருவரையும் இம்சித்ததில்லை; பூர்வ ஜன்மங்களில் பிராணிகளிடத்தில் யாதொரு பாபத்தையும் செய்ததில்லை. எனக்கு என் புத்திரன் உத்தரக்கிரியைகளைச் செய்ய வேண்டியிருக்க, அவன் பால்யத்திலேயே யமலோகத்திற்குப் போகும்படியான கொடிய காரியம் என்ன செய்தேன்? இதுவரையில் இப்படிப் பட்ட அநியாயத்தைக் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை; இந்த ராமனுடைய ஆளுகையில் மாத்திரமே இவ்விதமான அகாலமரணம் சம்பவித்திருக்கிறது. ராமன் ஏதோ மகா பாபத்தைச் செய்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தத் தேசத்தில் குழந்தைகளுக்கு மரணபயம் உண்டாகுமா?” என்று கதறி அழுதார்.
மகனை இழந்த சோகம்:
இதற்குள் ராகவனும் சகோதரர்களும் பரிஜனங்களும் வெளியில் வந்தார்கள். பிராம்மணன் ராமனைப் பார்த்து அடங்காக் கோபங்கொண்டு, “மகாராஜரே! என் புத்திரன் பாலன்: மரணத்தின் வசத்தில் அகப்பட்டான்; இவனை இப்பொழுதே பிழைப்பிக்க வேண்டும்; இல்லாவிட்டால் உன் அரண்மனை வாசலில் நானும் என் மனைவியும் உயிரை விடுவோம். இந்தக் கோசல ராஜ்யத்தில் மக்களைக் காக்க நாதனில்லை என்று தோன்றுகிறது. எங்களைக் கொன்ற பிரம்மஹத்திதோஷம் உன்னை ஒவ்வொரு நிமி ஷமும் உபத்திரவிக்கட்டும்: நீ சுகமாய் இரு. எங்களுடைய பழியைக் கட்டிக்கொண்டு நீயும் உன் சகோதரர்களும் தீர்க்காயுசுள்ளவர்களாய் வாழுங்கள். நீ ராவணாதி அசுரர்களை வென்றாய் என்றும் மகாபலவானென்றும் புகழ் அடைந்திருக்கிறாய்.
இராமனது ஆட்சியைப் பழித்தல்:
உன்னால் ஆளப்பட்ட ராஜ்யத்தில் வசிக்கிறோம். நீ எங்களிடத்தில் கடமை வாங்கவில்லையா? எங்களை காக்கக் கடமைப்பட்டிருக்க வில்லையா? உன்னால் எங் களுக்கு எள்ளளவும் சுகமில்லை. அகாலத்தில் எங்களுக்கு மரணபயம் நேர்ந்தது உன்னாலல்லவா? இட்சுவாகு வம்ச சக்கரவர்த்திகளான மகாத்மாக்கள் ஆண்ட ராஜ்யம், குழந்தைகளுக்கு மிருத்யுவான ராமனுடைய கையில் அகப்பட்டு நாதனில்லாமல் போயிற்றே! அரசன் நீதியாகப் பிரஜாபாலனம் செய்யாவிட்டால் அவனுடைய தோஷங் களால் ஜனங்கள் நாசமடைகிறார்கள். அரசனுடைய துராசாரத்தால் ஜனங்கள் அகாலத்தில் மரணமடைகிறார்கள். அல்லது நகரங்களிலும் நாட்டுப்புறங்களிலும் பிரஜைகள் செய்யும் பாவங்களை அரசன் சிட்சிக்காமலிருந்தால் அகால மரணம் நேரும். உன் தோசத்தால் என் புத்திரன் இறந்தானென்பதில் சந்தேகமில்லை. இந்த நகரத்திலாவது தேசத்திலாவது ஏதோ அநியாயம் நடக்கிறது” என்று சொல்லி, பலவகையில் மேன்மேலும் அரசரை நிந்தனை செய்துகொண்டு, மிகவும் வருந்தி தன் மகனை அணைத்துக் கொண்டார்.
ஏவம் ப3ஹுவிதை4ர் வாக்யை ருபருத்4ய முஹுர் முஹு: |
ராஜாநம் து3க்க3 ஸந்தப்த: ஸுதம் தமுபகூ3ஹதே ||
சருக்கம் 74 – யுக தர்மம்
ததா2 து கருணம் த3ஸ்ய த்விஜஸ்ய பரிதே3வநம் |
—ஸ்ராவ ராக4வ: ஸர்வம் து2க்க2 «ல்£க ஸமந்விதம் ||
இப்படி அந்தப் பிராம்மணன் துக்கத்தாலும் சோகத்தாலும் புத்தி சிதறித் தீனமாய் பிரலாபித்ததை ராகவன் கேட்டார். அதைப் பார்க்க சகிக்கவில்லை; மந்திரிகளையும் சகோதரர் களையும் வைசியப் பெரியோர்களையும் வசிட்டர் வாமதே வர் முதலியவர்களையும் அழைத்துவரச் சொன்னார். கொஞ்சநேரத்திற்குள் எல்லோரும் வந்து சேர்ந்தார்கள். “மார்க்கண்டேயர், மவுத்கல்யர், வாமதேவர், காச்யபர், காத் யாயனர், ஜாபாலி, கௌதமர், நாரதர் முதலிய மகாத்மாக்கள் ராமனை மங்களாசீர்வாதம் செய்து, அவரால் விதிப்படி பூஜிக்கப்பட்டு, தகுந்த இருக்கைகளில் உட்கார்ந்தார்கள். ராமன் அவர்களைக் கைகூப்பி வணங்கி மந்திரிகளையும் வைசியர்களையும் அனுகூலமாய் உபசரித்தார். பிறகு, நடந்த விருத்தாந்தம் யாவற்றையும் தெரிவித்து, “இந்தப் பிராம் மணர் இங்கே காத்துக் கொண்டிருக்கிறார் என்ன செய்ய வேண்டும்?” என்றார்.
கிருதயுகமும் திரேதாயுகமும்:
ரகுநாதன் கவலைகொண்டு முகம் வாடியிருப்பதைப் பார்த்து, நாரதர், “மகாராஜா! இந்தக் குழந்தைக்கு அகாலத்தில் மரணம் நேர்ந்த காரணத்தைச் சொல்லுகிறேன். அதைக் கேட்டு தகுந்தபடி செய். ஆதியில் கிருத யுகத்தில் பிராம் மணர்களே உபவாசம் விரதம் காயக்கிலேசம் முதலிய நியமங்களை அனுஷ்டித்துத் தவம் செய்துவந்தார்கள். மற்றவர்கள் நித்ய இல்லறத் தர்மங்களை மாத்திரம் நடத்தி வந்தார்கள்; தவம் செய்யவில்லை. இப்படித் தவத்தால் பிரகாசித்து, பிராம்மணர்களே பிரதானமாய், அக்ஞானத்தால் மயங்காமல், எல்லா மக்களும் கிருத யுகத்தில், வசிக்கும் பொழுது மரணமென்பதே இல்லாமல் தீர்க்கதரிசிகளாக இருந்தனர். அதர்மம் கொஞ்சம்கூட இல்லை. மூன்று காலங் களிலும் நடக்கும் சகல விருத்தாந்தங்களையும் சுலபமாய் அறியும் சக்தி அவர்களுக்கு உண்டு. அந்த யுகம் முடிந்த பிறகு திரேதாயுகம் ஆரம்பித்தது. அதில் மனுவம்சத்தில் பிறந்த சத்திரியர்களே பிரதானம், திட சரீர முள்ளவர்களாய் அவர்கள் தவத்தைப் பூர்ணமாய் மேற்கொண்டார்கள்.
(ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்றென்ற புத்தி மறை யவும் தேகத்தில் அபிமான முண்டாயிற்று. திரேதாயுகத்தில் வசித்த மனிதர்களுக்கு இதே முக்கியமான குணம், முன்பு பிராம்மணர் களால் மேற்கொள்ளப்பட்ட தவத்தை இவர் களும் செய்ய ஆரம்பித்தார்கள். தீரயீ என்று சொல்லப்பட்ட வேதத்தில் விதித்த திரேதாக்னியால் செய்ய வேண்டிய கர்மங்களில் பிரவிருத்தி முக்யமாவதால் இந்த யுகத்திற் கிரேதாயுகமென்ற பெயர் வந்தது தீர்த்தீயம்)
ஆனால் அவர்களைவிட கிருதயுகத்திலிருந்த பிராம் மணர்கள் வீரியத்திலும் தவத்திலும் மேலானவர்கள்; திரேதா யுகத்திலிருந்த பிராம்மணர்கள் சிறிது தாழ்ந்தவர்கள். அதனால் அந்தக் காலத்து சத்திரியர்கள் அவர்களுக்கு சமானர்கள். (கிருதயுகத்தில் சத்ரியர்களுக்குத் தவம் செய்ய அதிகாரமில்லாததால் பிராம்மணர் களைக் காட்டிலும் தாழ்ந்தவர்கள். திரேதாயுகத்தில் இருவர்க்கும் தவம் செய்ய அதிகார மேற்பட்டதால் சமானர்கள்-தீர்த்தீயும்) ‘கிருத யுகத்தில் பிராம்மணர்களுக்கும் சத்திரியர்களுக்கும் தபஸால் பேதம் ஏற்பட்டிருந்தது. திரேதாயுகத்தில் இருவரும் தவம் செய்ததால் யாதொரு பேதமும் தோன்றவில்லை. ஆகை யால் வேதங்களில் சொல்லியிருக்கும் நான்கு வர்ணங் களையும் ஏற்படுத்தி அவைகளுக்குத் தகுந்த ஆசாரங்க ளையும் கற்பித்தார்கள்.
மாறிவரும் யுகங்களுக் கேற்ப மாற்றங்கள்:
இப்படி யக்ஞம் முதலிய தர்மங்களைப் பிரதானமாகக் கொண்டு அதர்மம் மேலிடாமல் திரேதாயுகம் விளங்கும் பொழுது, அதர்மம் நாலிலொரு பாகத்தைப் பூமியில் பரவச் செய்தது. கிருதயுகத்தோர்களுக்குக் களங்கமற்ற ஞான மிருந்ததால் அவர்கள் பிரம்ம வித்தையில் அதிகாரம் பெற்று அதர்ம கிலேசமுமற்றிருந்தார்கள். திரேதாயுகத்தோர்களுக்கு அந்த நிர்மல ஞானமில்லாததால் பிரம்ம வித்தையில் அதி காரமில்லை. வர்ணாசிரம தர்மங்களையே மேற்கொண்டார் கள். ஆகையால் அதர்மம் பரவ ஆரம்பித்தது. (திரேதா யுகத்தில் வர்ணாசிரம தர்மங்களே பிரதானமாக இருந்தன. அவைகளை மேற்கொள்வதற்கு இடையூறான பாபங்கள் இல்லை. அப்போது பரகிம்சை அசத்யம் அதிருப்தி என்ற ரூபத்தையுடைய அதர்மம், அதன் நாலு பாதங்களில் ஒரு பாதத்தைப் பூமியில் வைத்து நடந்தது. அதர்ம சம்பந்தத்தால் அவர்களுக்குத் தேஜஸ் மந்தமாயிற்று, கிருதயுகத்தில் எல்லோரும் நினைத்த காரியங்களை உடனே முடிக்கும் சக்தியுள்ளவர்கள். பயிரிடாமலும் சமைக்காமலும் தங் களுக்கு வேண்டிய ஆகாரத்தை அடையக்கூடிய யோக சக்தியுள்ளவர்கள். திரேதாயுகத்தில் அந்த யோக்யதை இல்லாமையால் எல்லோராலும் நிந்திக்கப்படும் ஜீவனோ பாயத்தைக் கைப்பற்றிப் பிறர்க்குத் தொண்டு செய்து பிழைத்தார்கள். பூமியைப் பயிரிட்டு அதனால் கிடைத்த தான்யத்தைச் சமைத்து தேகத்தை வளர்த்தார்களென்று கருத்து.)
இது அதர்மத்தின் முதலாவது பாகத்திற்கு அடையாளம், அதர்மம் மேலிடக் கிருதயுகத்தில் ஜனங்களுக்கு இருந்த ஆயுள்காலம் குறைந்தது. அதைக்கண்டு பயந்து, எல் லோரும் சத்யத்தையும் தர்மத்தையும் கைப்பற்றி, மங்கள கரமான கர்மங்களையே செய்து வந்தார்கள். (திரேதாயுகத்தில் அஞ்ஞானத்தால் பீடிக்கப்பட்டவனுக்கு யாக யக்ஞம் முதலிய கிரியைகளால் சித்தம் தெளிந்ததென்று கருத்து) பிராம்மணர்களும் சத்திரியர்களும் தவம் செய்தார்கள். வைசியர்களும் நான்காவது வர்ணத்தவர்களும் அவர் களுக்குப் பணி செய்து வந்தார்கள். இவர்களுக்குப் பயிரிடு தல் வியாபாரம் பணிவிடை செய்தல் கடமையாகும். சேவை நான்காம் வர்ணத்தவர்களுக்கு முக்கியமானதாக இருந்தது.
திரேதாயுகத்தின் முடிவில் அதர்மத்தால் ஆயுள் வரவரக் குறைந்தது. பயிரிடுதல் முதலிய தொழில்களால் கஷ்டம் அதிகரித்தது. ஜனங்கள் மரணமடைய ஆரம்பித்தார்கள். அப்பொழுது அதர்மம் இரண்டாவது பாதத்தைப் பூமியில் வைத்தது. ஆகையால் அதற்குப்பின் வந்த யுகத்திற்குத் துவாபரமென்று பெயர். ஜனங்களுடைய ஆயுட்காலம் இன்னும் குறைந்தது. விசேஷ சிரமப்பட்டாலொழிய பயிர்த்தொழில் பயனைக் கொடுக்கிறதில்லை. இந்த யுகத்தில் வைசியர்கள் தவம் செய்ய ஆரம்பித்தார்கள். இப்படி மூன்று யுகங்களிலும் மூன்று வர்ணத்தார்களும் தவம் செய்ய அதிகாரம் பெற்றார்கள். நான்காம் வர்ணத்தவனுக்குத் தவம் செய்ய அதிகாரம் ஏற்படவில்லை; சமயம் கிடைக்கவுமில்லை. கலியுகத்தில் அது அனுஷ்டானத்திற்கு வரும்.
குழந்தை பிழைக்கும் வழி:
துவாபரத்தில் பரம அதர்மமான காரியத்தை, இந்தத் திரேதாயுகத்தில் ஒருவன் செய்யக் கூடுமோ? இப்பொழுது உன் ராஜ்யத்தில் யாரோ தகுதியற்ற ஒருவன் தவம்செய்து கொண்டிருக்கிறான். இந்தப் பிராம்மணனுடைய புத்திரன் அகாலத்தில் மரணமடைந்ததற்கு அதுவே காரணம். அரச னுடைய ராஜ்யத்திலாவது ராஜதானியிலாவது தர்மத்திற்கும் நியாயத்திற்கும் விரோதமான காரியங்களைச் செய்யும் புத்திஹீனன் நரகத்தை அடைகிறான். அந்த அரசனுக்கும் அதேகதி. பிரஜைகளிடத்திலிருந்து ஆறிலொரு கடமை வாங்கிக் கொண்டு அவர்களை அரசன் காக்க வேண்டிய தல்லவா நியாயமாய் ராஜ்யபாலனம் செய்பவன் பிரஜைகள் செய்யும் வேதாத்யயனத்திலும் பாகத்தையடைவது போல் அஜாக்கிரதையால் காக்கத் தவறுகிறவன் அவர்கள் செய்யும் பாவத்திலும் பாகத்தை அடைகிறான். ஆகையால் உன் ராஜ்யத்தில் நன்றாய்த் தேடிப்பார். அதர்மம் கண்ணில் பட்டவுடன் அதை நீக்க வேண்டும். அப்பொழுது தர்மம் ஓங்கித் தழைக்கும்; ஆயுள் விருத்தியாகும்; இந்தக் குழந்தை யும் பிழைப்பான்” என்றார்.
ஏவம் சேத் த4ர்ம வ்ருத்3தி4ஸச ந்ருணாம் சாயுர் விவர்த4நம் |
ப4விஷ்யதி நர•ரேஷ்ட2 ப3£லஸ்யாஸ்யச ஜீவிதம் ||
(32)
சருக்கம் 75 – தபசியைக் காணுதல்
நாரத3ஸ்ய து தத்3 வாக்யம் ஸ்ருத்வாம்ருத மயம் தத2£
ப்ரஹர்ஷ மதுலம் லேபே4 லக்ஷமணம் சேத3 மப்2ரவீத்||
(1)
நாரதருடைய வார்த்தையைக் கேட்டு ராமன் அமிருதபானம் செய்ததுபோல் மகிழ்ந்து லட்சுமணனை அழைத்து, “நீ அந்த பிராம்மணரிடத்திற்குச் சென்று கொஞ்சகாலம் பொறுத்திருக்கும்படி கேட்டு சமாதானம் செய். அந்தக் குழந்தையின் தேகத்தை எண்ணெய்க் கொப்பரை யில் வைத்து வாசனை திரவியங்களால் காப்பாற்றுங்கள். அவயவங்கள் விகாரமடையாமலும் தளராமலும் சொரூபம் மாறாமலும் இருக்கும்படி ஜாக்கிரதை செய்” என்று ஆணையிட்டு, புஷ்பக விமானத்தை வரும்படி நினைத்தார். உடனே அது கண்ணிற்குத் தோன்றி அவரை நமஸ்கரித்து, பிரபோ! தங்களுடைய அடிமை; இதோ வந்திருக்கிறேன். என்ன செய்ய வேண்டும்” என்று பிரார்த்தித்தது.
ராமன் தபசியைத் தேடி அடைதல்:
ராமன் ராஜ்யத்தைப் பரத லட்சுமணர்களிடத்தில் ஒப்பு வித்து, மகரிஷிகளிடத்தில் உத்தரவுபெற்று ஆயுதபாணியாய் அதில் ஏறிச் சென்றார். மேற்குத் திக்கில் வெகு ஜாக்கிரதை யாய்த் தேடிப்பார்த்தும், யாதொரு அதர்மத்தையும் காண வில்லை. அப்படியேவடக்கும் கிழக்கும் நிர்மலமான கண்ணாடியைப்போல் தெளிவாக இருந்தன.
பிறகு தெற்குத் திக்கில் செல்லுகையில், விந்தியபர்வதத் திற்கு அடுத்த சைவலமென்ற மலையின் சாரலில் ஒரு பெரிய ஏரியையும் அதனருகில் ஒரு தபசி தலைகீழாய்த் தொங்கிக்கொண்டு கடுந்தவம் செய்வதைக் கண்டார். ராமன் அவனருகே சென்று, “நீ தன்யன்; கடுமையான விரதத்தை அனுஷ்டிக்கிறாய் எந்த வர்ணத்தைச் சேர்ந்தவன்; இவ்வளவு உறுதியாய்த் தவம் செய்யும் நீ யாரென்று அறிய ஆசை கொண்டேன். நான் அயோத்தியாதிபதி; தசரத புத்திரனான ராமன்.
தபசியை பார் எனல்:
இந்தத் தவத்தால் தேவதைகளைத் திருப்தி செய்து எந்த விரதத்தைப் பெற உத்தேசிக்கிறாய்? சொர்க்கமா? மோட் சமா? நீ பிராம்மணனா? பராக்கிரமசாலியான சத்ரியனா? நான்காம் வர்ணத்தவனா? நிஜத்தைச் சொல்” என்றார்.
அந்தத் தபசி தலைகீழாக இருந்து கொண்டே தன் ஜாதியையும் உத்தேசத்தையும் ராமனுக்குத் தெரிவித்தான்.
இத்யேவமுக்த: ஸ நராதி4பேந
அவாக் —ரா தா2ஸரதா2ய தஸ்மை |
உவாச ஜாதிம் ந்ருப புங்கவாய
யத் காரணம் சைவ தப: ப்ரயத்ந: ||
சருக்கம் 76 – சம்பூகனுடைய வதம்
தஸ்ய தத்2 வசநம் •ருத்வா ராமஸ்யாகலிஷ்ட கர்மண:|
அவாக்—ராஸ் தத2ர பூத்வா வாக்யமேத து2வாச ஹ ||
“மகாராஜா! நான் நான்காம்வர்ணத்தவள்: சம்பூகனென்று எனக்குப் பெயர் – இந்தச் சரீரத்துடன் தேவபதவியை அடைய விரும்புகிறேன். ஆகையால் பொய் சொல்ல மாட்டேன் இந்தக் கடுந்தவத்தைச் செய்வதன் உத்தேசம் இதுவே” என்றான். உடனே ராமன் மின்னலைப் போன்ற தன் கத்தியை உறையிலிருந்து உருவி அவன் தலையை வெட்டினார். தேவர்கள் ‘நல்லது நல்லது’ என்று அவரை அடிக்கடி புகழந்தார்கள். ஆகாசத்திலிருந்து. பரிமளமுள்ள புஷ்பமாரி பெய்தது.
தேவர்களிடம் ராமன் கேட்டது:
தேவர்கள் அவரிடத்தில் அளவற்ற அன்பு கொண்டு “ராம! மகாபுத்திமானே! இந்தப் பரமோபகாரத்தை எங் களுக்குச் செய்த நீ, வேண்டிய வரங்களைக்கேள். கொடுக்கி றோம். இவன் தவத்தால் சொர்க்கத்தை அடையத் தகுந்த வனா? அவனுக்கு அந்தப் பதவி கிடைக்காமல் நன்றாகச் செய்தாய்” என்றார்கள். ராமன் கைகூப்பி, “தேவேந்திர! என்னிடத்தில் தேவர்களுக்குச் சந்தோஷமுண்டானால் அந்தப் பிராம்மணனுடைய புத்திரன் பிழைக்கட்டும். நான் கோரும் வரம் இதுவே. அவருடைய ஒரே புத்திரன் அகாலத்தில் மரணமடைந்தது என் அபராதத்தாலல்லவா? அவனைப் பிழைப்பியுங்கள். நான் செய்த பிரதிக்ஞை பொய்யாகக்கூடாது” என்றார்.
அப்பொழுது தேவர்கள் “ரகுவீர! கவலைப்படாதே. அந்தக் குழந்தை பிழைத்தெழுந்து பெற்றோர்களுடன் சுகமாயிருக்கிறான். இந்தத் தபசியை நீகொன்ற கணத்தி லேயே அவன் உயிர்பெற்று எழுந்தான். உனக்குச் சகல மங்களங்களும் உண்டாகட்டும். அகத்திய மகரிஷியின் புண்ணியாசிரமத்திற்குப் போவோம் வா. அவர் பன்னிரண்டு வருடங்களாக ஜலத்தில் படுத்துக்கொண்டு ஒரு கடுமையான விரதத்தை அனுஷ்டித்து இன்று முடித்தார். அவரைத் தரிசித்துப் புண்ணியம் பெற்றவர்களாவோம். நீயும் வா” என்று அழைத்தார்கள்.
அகத்தியரின் இருப்பிடம் செல்லுதல்:
ராமன் அதற்குச் சம்மதித்துப் புஷ்பகத்திலேறி அவர் களுடன் அகத்தியர் ஆசிரமத்திற்குச் சென்றார். தேவர்கள் தானிருக்குமிடத்தைத் தேடிவருவதைக் கண்டு, அகத்தியர் அவர்களை விதிப்படி உபசரித்தார். அவர்கள் அந்தத் தபோநிதியால் பூஜையைப் பெற்று, அவரைத் தாங்கள் பூசித்து மகிழ்ச்சியாய்த் தேவலோகம் சென்றார்கள். பிறகு ராமன் விமானத்திலிருந்து இறங்கி அந்தத் தர்மாத்மாவை நமஸ்கரித்து, அவரால் வெகு அன்புடன் உபசரிக்கப்பட்டு இருக்கையில் உட்கார்ந்தார். அந்த மகாதபஸ்வி, “புரு ஷோத்தம! க்ஷேமமா? உன்னைப் பார்க்க என்ன பாக்கியம் செய்தேனோ? என் சகல தபசும் புண்ணியமும் விரதமும் நியமமும் ரூபமெடுத்து வந்ததோ? அனந்த கல்யாணகுண நிதியான உன்னிடத்தில் எனக்கு எல்லையற்ற அன்பு; மேலும் நீ அதிதி; மேலும் மகாராஜா; என் இதய கமலத்தில் நித்யவாசம் செய்யும் இஷ்ட தெய்வம். ஆகையால் பூஜை என்பது உனக்கே தகும்.
அகத்தியர் அளித்த ஆபரணம்:
சம்பூகனென்ற தபசியைக் கொன்று அக்குழந்தையைப் பிழைப்பித்தாயென்று தேவர்கள் சொல்லுகிறார்கள். இன்று ராத்திரி என்னுடன் இங்கேயிரு. காலையில் அயோத்யைக்குப் போகலாம். நீ ஆதிபுருஷன்; லக்ஷ்மீ சமேதன்; சகலப் பிரபஞ்சமும் உன்னிடத்தில் அடங்கியிருக்கிறது; சகல பூதங் களுக்கும் நீ ஆத்மா; புராண புருஷன். இந்த ஆபரணத்தைப் பார்; இது விசுவகர்மாவால் செய்யப்பட்டது; அபாரதேஜஸால் ஜொலிக்கிறது. இதைப் பெற்றுக்கொள்.
எனக்கு நிகரற்ற ஆனந்தமுண்டாகும். ஒருவனுக்கு வெகுமானமாகக் கொடுக்கப்பட்ட பொருளை உப யோகிக்காமல் வேறொருவர்க்கு அதையே வெகுமானமாய்க் கொடுப்பது விசேசபலனைக் கொடுக்குமென்று பெரி யோர்கள் சொல்லுகிறார்கள். இதைத் தரிக்கவும் இதனுடைய அபூர்வபலன்களை அனுபவிக்கவும் நீயே தகுந்தவன். ‘இந்திரன் முதலிய தேவர்களுக்கு ஆதாரம் நீயல்லவா? ஆகையால் இதை உனக்கு விதிப்படி தானம் செய்கிறேன் பெற்றுக்கொள். விசித்திர சக்தியுடன் சூரியனைப்போல் பிரகாசிக்கும் இந்தத் திவ்யாபரணம் உன்னிடத்தில் இருக்க வேண்டும்” என்றார்.
சத்ரியன் தானம் பெறலாமா?
அதைக்கேட்டு மகாபுத்திமானான ராமன், தான் இட்சுவாகு சக்கரவர்த்திகளின் வம்சத்தில் பிறந்தவரென்றும், அவர்கள் பிறருக்குக் கொடுப்பதேயன்றி வாங்குவதில்லை யென்றும். அது சத்திரிய தர்மத்திற்கு விரோதமென்றும் ஆலோசித்து, “சுவாமி! பிராம்மணன் தானம் வாங்கலா மென்று சொல்லப்படுகிறது: சத்ரியனுக்கு அது கூடாது – அப்படிப்பட்ட தங்களிடத்தில் சத்ரியனான நான் தானம் வாங்கலாமா? இதன் தர்மத்தை எனக்குச் சொல்ல வேண்டும்” என்றார்.
அதற்கு அகத்தியர், “ராம! கிருதயுகத்தில் பிராம்மணர்கள் பூமியை ஆண்டு வந்தார்கள். அரசர்களில்லை. இந்திரன் தேவர்களுக்கு அரசனாயிருந்தான். அப்பொழுது மக்கள் பிரம்மாவிடத்திற்குச் சென்று, “தாங்கள் தேவர்களுக்கு இந்திரனை அரசனாக நியமித்திருக்கிறீர்கள். எங்களுக்கும் ஓர் அரசனை ஏற்படுத்த வேண்டும். அவனைப் பூஜிப்பதால் எங்களுடைய பாவங்களைப் போக்கிக் கொள்வோம். இனி அரசனில்லாமல் ஒரு நிமிஷம் கூட இருக்க மாட்டோம்” என்றார்கள்.
அதைக்கேட்டு பிரம்மா அவர்களுக்குப் பரமஇதமான விஷயத்தை ஆலோசித்து, இந்திரன் முதலிய லோக பாலர்களை அழைத்து, ‘உங்களுடைய தேஜஸில் ஒரு பாகத் தைக் கொடுங்கள்’ என்றார். பிறகு சூப்பென்ற ரஜசப்தத்தைச் செய்ய அதிலிருந்து சூபனென்ற அரசனுண்டானான். லோகபாலர்களுடைய அம்சங்களை அவனிடத்தில் வைத்து, அவனை மக்களுக்கு ஈச்வரனாயிருக்கும் படி நியமித்தார். இந்திரனுடைய அம்சத்தால் அரசன் பூமியை ஆளுகிறான்; வருணனுடைய பாகத்தால் மக்களின் தேகங் களைக் காக்கிறான்; குபேரனுடைய பாகத்தால் தனத்தைக் கொடுக்கிறான்; யமனுடைய பாகத்தால் தண்டிக்கிறான்; ஆகையால் இந்திரனுடைய அம்சத்தால் நீ இதைப் பெற்றுக்கொள்; இதனால் உனக்கும் மங்களமுண்டாகும்; எனக்கும் உத்தம கதி கிடைக்கும்” என்றார்.
ஆபரணம் கிடைத்த விதம் கேட்டல்:
அவருடைய வார்த்தை உத்தம தர்மத்திற்கு ஒத்திருப் பதைக் கண்டு ராமன் அந்த ஆபரணத்தைப் பெற்றுக் கொண்டார். “மகரிஷே! திவ்யரூபத்தையும் காந்தியையும் உடையதாய். வெகு அற்புதமாக இருக்கிறது. இது தங்களுக்கு எப்படிக் கிடைத்தது? யாரிடத்திலிருந்து இதைக் கொண்டு வந்தது; அபூர்வமான கிருத்தியங்களைச் செய்வதில் தங்களுக்கு நிகரில்லை. சமுத்திர ஜலத்தைக் குடித்தது விந்திய மலையை அழுத்தினது, வாதாபி இல்வலனென்ற அசுரர்களைக் கொன்றது முதலிய ஆச்சரியங்களைத் தங்களிடத்தில் காணலாம். ஆகையால் இதை அறிய வேண்டுமென்ற ஆவல் கொண்டிருக்கிறேன்” என்றார். அகத்தியர், “ராம! இந்த மனோகரமான தலத்தில் சென்ற திரேதாயுகத்தில் நடந்ததைச் சொல்லுகிறேன். கேள். இந்த ஆபரணம் எனக்குக் கிடைத்த பொழுது ஒரு ஆச்சரியமான விஷயத்தைக் கண்டேன்” என்றார்.
ரமணீயப்ரதே3 «ல்ஸ்மித் வநே யத்2த்2ருஷ்டவாநஹம்|
ஆ•சர்யம் மே மஹா பா3ஹோ த3£நமா•ரித்ய கேவலம் ||