சென்னை, பிப் .2 தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் புதிதாக 1,021 மருத்துவர் களை நியமிப்பதற்கான கலந்தாய்வு சனிக்கிழமை (பிப்.3) தொடங்குகிறது. அதன்படி, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் (எம்ஆர்பி) மூலம் தேர்வான மருத்துவர்கள் அனைவரும் அவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் தரவரிசைப்படி கலந்தாய்வில் பங்கேற்க லாம் என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் வெளியிட்ட அறிவிப்பு: எம்ஆர்பி மூலம் தேர்வான மருத்துவர்களுக்கான பணியிட கலந்தாய்வு பிப்.3, 4 ஆகிய தேதிகளில் சென்னை, எழும்பூர் குடும்ப நல பயிற்சி மய்யத்தில் நடைபெற உள்ளது. தரவரிசையில் 1 முதல் 500 வரையில் உள்ள மருத்துவர்களுக்கு 3-ஆம் தேதியும், 501 முதல் 1021 வரை உள்ள மருத்துவர்களுக்கு 4-ஆம் தேதியும் கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வில் பணியிடங்களைத் தேர்வு செய்தவர்கள், நியமன ஆணை பெற்றதிலிருந்து 15 நாள்களுக்குள் பணிக்கு சேர வேண்டும். எம்பிபிஎஸ் சான்றி தழுடன் எஸ்எஸ்எல்சி, மேல்நிலை படிப்பு சான்றிதழ்கள், உறைவிட பயிற்சி நிறைவு சான்று, நிரந்த மருத்துவக் கவுன்சில் பதிவு ஆவணம், ஜாதி சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு வருவது அவசியம். கலந்தாய்வுக்கு வரும் மருத்துவர்கள் வெள்ளை அங்கி அணிந்து வர வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
தமிழ்நாட்டில் 1,021 மருத்துவர் பணியிடங்கள் நிரப்புவதற்கு மருத் துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு சான் றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிக்கப்பட் டுள்ளன. இந்தத் தேர்வில் 25,000-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இதில் 1,021 பேர் மட்டும் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப் பட்டு அவர்களுக்கு பொது சுகாதாரத் துறை மூலம் கலந்தாய்வில் பங்கேற்க மின்னஞ்சல் மூலம் அழைப்பு விடுக்கப் பட உள்ளது. கலந்தாய்வுக்கு பிறகு பிப்.5-ஆம் தேதி பணியிடப் பட்டியல் இறுதி செய்யப்படும். அதைத் தொடர்ந்து பிப்.6-ஆம் தேதி தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல் கலைக்கழகத்தில் 1,021 மருத்துவர் களுக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்றார் அவர்.