தருமபுரி, பிப்.1- தகடூர் அதியமான் வரலாற்று சங்கம் சார்பில் தருமபுரி முத்து இல்லத் தில் “மக்கள் அதிகாரம் உணரப்பட்ட வரலாறு – வைக்கம் போராட்ட கருத்தரங்கு” நிகழ்வு நடைபெற்றது. மேனாள் நாடாளு மன்ற உறுப்பி னர் மருத்துவர் செந்தில் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்வின் சிறப்புரையாக “வைக்கம் போராட்டம்” நூலாசிரி யர் ஆய்வாளர் பழ.அதி யமான் அவர்கள் சிறப்பு ரையாற்றினார். வைக்கம் போராட்டம் நூலினை பற்றி தகடூர் ப.அறி வொளி அறிமுக வுரை யாற்றினார்.
சிறப்புரையாற்றிய ஆய்வாளர் பழ.அதிய மான் அவர்களுக்கு தரும புரி விடுதலை வாசகர் வட்ட செயலாளர் மா. சுதா அவர்கள் பய னாடை அணிவித்தார். கழக நகர தலைவர் கரு. பாலன், நகர இளைஞரணி செயலாளர் அர்ஜுனன், அரூர் மாவட்ட இளைஞ ரணி தலைவர் த.மு.யாழ் திலீபன்,பெரியாரிய தோழர் சந்தோஷ் ஆகி யோர் கலந்துகொண்டனர்.
வைக்கம் போராட்ட கருத்தரங்கம்
Leave a Comment