அப்போ இந்தச் செய்தி உங்களுக்குத் தான்
புதுடில்லி, அக்.11 இந்தியாவில் மக்க ளுக்கு நிதி பரிவர்த் தனை செய்ய வங்கி கணக்கு என்பது கட்டாயமாக உள் ளது. இதில் சிலர் ஒன்றுக்கும் மேற் பட்ட வங்கி களில் கணக்கு வைத்துள்ளனர்.
அவர்களில் இரண்டு அல்லது மூன்று வங்கி களில் கணக்கு வைத்திருந்தால் என்னென்ன பிரச்சினை வரும் என்பதை தெரிந்து கொள் ளுங்கள். அதாவது மூன்று வங்கிகளுக்கு மேல் கணக்கு வைத்திருக்கும் போது ஒவ்வொரு கணக்கிலும் ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் சிக்கல் ஏற்படும். பெரும்பாலான வங்கி கணக்குகளில் குறைந்த பட்ச இருப்பு வைப்பதை இழப்புகளை ஏற்படுத் தக் கூடும். இந்த நிலுவை தொகையில் கிடைக் கும் ஆண்டு வட்டி 3.5 முதல் 4 சதவீதம் வரை மட்டுமே. அதனால் குறைந்த வருமானம் உள்ள வர்கள் வங்கி கணக்குகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.
பல வங்கி கணக்குகள் இருந்தால் எந்த வங்கி அதிக கட்டணம் வசூல் செய்கிறது என்பதை தெரிந்து கொள்வது கஷ்டமாகும். மேலும் சில வங்கிகள் டெபிட் கார்டுக்கு ஒவ்வொரு ஆண் டும் 750 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றன. அதனைப் போலவே குறைந்தபட்ச இருப்பு இல்லை என்றால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலையும் ஏற்படும். வருமான வரி தாக்கல் செய்யும்போது அனைத்து வங்கி கணக்கு விவரங்களும் சேர்க் கப்பட வேண்டும். வாடிக்கை யாளர்கள் உயிரிழந்தால் அவர் களின் வாரிசுகள் அனைத்து வங்கிகளுக்கும் செல்ல முடியாது. வங்கி கணக்குகளின் விவரங்கள் சரியாக தெரியாததே இதற்கு காரணம். எனவே இரண்டு அல்லது மூன்று வங்கி கணக்குகள் மட்டுமே வைத்துக் கொள்வது சிறந்ததாக இருக்கும்.