சென்னை, பிப். 1- மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (31.1.2024) செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் 2,300 செவிலியர்களுக்கு பணி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.
அதில், 800 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை அடுத்த வாரம் வழங்கப்படவுள்ளது. காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப பணி நியமன ஆணைகள் வழங் கப்பட்டு வருகின்றன.
அதேபோல், 1,021 மருத்துவர் களைத் தேர்வு செய்வதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்னும் 2 நாளில் முடிந்து விடும். நீதி மன்றத்தில் வழக்குகளுக்கும் தீர்வு காணப்பட்டு விட்டது.
கலந்தாய்வு நடத்திய பிறகு, சென்னை கிண்டி யில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் 1,021 மருத்துவர்களுக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு அடிக்கல் நாட்டி 5 ஆண்டுகள் ஆகிறது. இப்போது தான் சுற்றுச்சூழல் அனுமதிக்கே சென்றுள்ளது என்றார்.