சென்னை, அக்.12 அனைத்துக் கட்சி தீர்மானம் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்படும் என்றார் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன்.
தமிழ்நாட்டிற்குகருநாடகா,வினா டிக்கு 3000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில்பரிந்துரைக் கப்பட்டதையடுத்து 10 நாள்களுக் கும் மேலாக 3 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.ஆனால், ஆணை யத்தின் இந்த முடிவை எதிர்த்து கருநாடகாவில் பல பகுதி களில் அம்மாநில விவசாய அமைப் பினரும் கன்னட அமைப் பினரும் போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில், காவிரி பிரச் சினைக்காக தமிழ்நாடு டெல்டா மாவட்டங்களில் தமிழ்நாடு விவசா யிகளுக்கு ஆதரவு தெரிவித்து முழு கடையடைப்பு நடைபெற்றது.
இது குறித்து தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:
“காவிரி நதிநீர் பங்கீடு குறித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட அனைத்துக் கட்சி தீர்மானத்தை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைப்போம். நேற்று (11.10.2023), தஞ்சையில் விவசாயி கள் நடத்திய கடையடைப்புப் போராட்டத்தில் இருந்து அவர்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது.
இவ்வாறு தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.