ஆளுநருக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்
சென்னை, ஜன.31 மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்றுவெளியிட்ட அறிக்கை:
தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை பற்றி கொஞ்சம்கூட அறியாமல் ஆளுநர் பேசியிருக்கிறார். நினைவுச் சின்னத்தை கேலிக்குரிய அவமானம் என கொச்சைப்படுத்தியிருக்கிறார். ஆதிக்கத்தை நிலை நாட்ட விரும்பும் ஆர்எஸ் எஸ்-அய் பதவி சுகத்துக்காக ஆராதிக்கும் ரவிகளுக்கு, ஆதிக்கங்களுக்கு எதிராக சமத்து வத்தை நிலைநாட்டுவதற்கான தியாகத்துக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்ட கம்யூ னிஸ்ட்களையும், அத்தோடுதுணை நிற்கும் உழைப்பாளி மக்களையும் புரிந்து கொள் வதற்கான மனமும், திறமும் கிடையாது. உண் மையில் ஆர்.என்.ரவி போன்ற ஒருவர் அந்த பூமியில் கால் வைத்ததுதான் அந்த மகத்தான தியாகிகளை அவமதிக்கும் செயலாகும். அவரது செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
ஏதோ பிரதமர் வீடு கட்டும் திட்டம் சர்வரோக நிவாரணி போலவும், இந்தியாவில் பாஜக ஆளும் மாநிலங்கள் உட்பட குடிசைகளே இல்லாமல் மாற்றிவிட்டது போலவும் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். தொழிலாளி வர்க்கத்தின் உண்மையான சாம்பியன் செங்கொடி இயக்கம்தான். பல்வேறு தியாக வடுக்களை கொண்ட இயக்கம் செங்கொடி இயக்கம் என்பதை ஆளுநர் ரவி அறிந்திருக்க வாய்ப்பில்லை.
எனவே, அவர் தன்னால் புரிந்து கொள்ள முடியாத பிரச்சினைகளை பற்றி பேசாமல் மவுனம் காப்பதே நல்லது.