சென்னை, ஜன.31 விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக, லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்திற்கு அருகில் உள்ள உலகத் தமிழர் வரலாற்று மய்ய வளாகத்தில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம், திருவள்ளுவர் சிலையினை 2024 மே மாதத்தில் நிறுவவுள்ளது.
அச்சிலையினை வழியனுப்பும் விழாவில் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் வி.ஜி.சந்தோசம், லண்டன் உலகத் தமிழர் வரலாற்று மய்யம் சார்பில், தமிழறிஞர் சிவாப்பிள்ளை அவர்களிடம் அய்ந்தரை அடி உயரமுள்ள திருவள்ளுவர் கற் சிலையை ஒப்படைத்தார். இவ்வழியனுப்பும் விழாவில், ஞானம் சிவாப்பிள்ளை மற்றும் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் இணைச் செயலாளர் விஜிபி ராஜாதாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
லண்டனுக்கு விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் திருவள்ளுவர் சிலை
Leave a Comment