அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் துணை தூதரகங்கள் 2023ஆம் ஆண்டில் 14 லட்சம் இந்தியர்களுக்கு விசாக்கள் வழங்கியுள்ளது. 2022அய் ஒப்பிடுகையில் விசா கேட்டு விண்ணப்பித்த இந்தியர்களின் எண் ணிக்கை 60 சதவீதம் அதிகம். கடந்த ஆண்டு இந்திய மாணவர்களுக்கு 1,40,000 விசா வழங்கப் பட்டுள்ளது. இது உலகில் வேறு எந்த நாட்டை யும் விட அதிகமாகும். உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு பத்து அமெரிக்க விசா விண்ணப்பதாரர்களில் ஒருவர் இந்தியராக உள்ளார். பார்வையாளர் விசா கேட்டு 7,00,000 க்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளன. விசாக்களுக்கான காத்திருப்பு நேரத்தை நாடு முழுவதும் சராசரியாக 1,000 நாட்களில் இருந்து 250 நாட்களாகக் குறைத்துள்ளன என தெரி விக்கப்பட்டுள்ளது.