30.1.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பாஜகவின் கொள்கைகள் நாட்டில் வன்முறையைப் பரப்புவதுதான் என பீகார் கிஷான்கஞ்ச் மாவட்டத்தில் நீதிப் பயணம் மேற்கொண்ட ராகுல் கண்டனம்.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ‘மீடியா மேனியா’ நோய் தாக்கியுள்ளதைப் போலத் தெரிகிறது. நாள்தோறும் தன்னைப் பற்றி ஏதாவது ஒரு செய்தி வரவேண்டும் எனச் செயல்பட்டு வருகிறார் என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அறிக்கை
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* இந்திய அரசாங்கத்தில் உள்ள 44 துறைகள், பிக் ஃபோர் (Ernst & Young, PwC, Deloitte மற்றும் KPMG ) உட்பட வெளி நிறுவனங்களில் இருந்து 1,499 ஆலோசகர் களைக் கொண்டுள்ளன. இந்தத் துறைகள் இணைந்து, இந்த ஆலோசகர்களுக்கு ஆண்டுக்கு 302 கோடி ரூபாய் செலவழிக்கிறது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தரவுகளை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* கோட்சே இந்தியாவின் முதல் பயங்கரவாதி, காந்தியின் கொள்கைகள்தான் நாட்டின் ஒரே நம்பிக்கை என்றார் கருநாடகா சட்ட மேலவை உறுப்பினர் பி.கே.ஹரி பிரசாத் – பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹரிபிரசாத், மாண்டியாவில் உள்ள கெரேகோடு பகுதியில் தேசியக் கொடிக்குப் பதிலாக பக்வா கொடியை ஏற்றியதன் மூலம் அமைதியை சீர்குலைப்பதாக பாஜக மீது குற்றம் சாட்டினார்.
தி இந்து:
* உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு அளிக்கப்படும் இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவரும் சதிதான் யுஜிசியின் புதிய வரைவு என்று ராகுல் குற்றச்சாட்டு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* மேற்கு வங்க மாநிலத்திற்கு இரண்டு ஆண்டுகளுக் கான என்ஆர்இஜிஏ நிலுவைத் தொகையை மோடி அரசு வழங்காவிட்டால் மறியலில் ஈடுபடப் போவதாக முதல மைச்சர் மம்தா எச்சரிக்கை.
* வழக்கு தொடுப்பவர்கள் தங்கள் பெயர்களுடன் மதம் அல்லது ஜாதியைக் குறிப்பிடும் வழக்கத்தை உடனடி யாக தவிர்க்க வேண்டும், அனைத்து நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு.
தி டெலிகிராப்:
* காஷ்மீர் பகுதியில் உள்ள லே பகுதியில் ஒன்றிய சுகாதார அமைச்சகத்தால் நடத்தப்படும் சுகாதார மற்றும் ஆரோக்கிய மய்யங்களின் பெயரான “ஆயுஸ்மான் மந்திர்” என்ற பெயரை ஹிந்தியில் இருந்து உள்ளூர் மொழிக்கு மாற்றவும், அதிலிருந்து மந்திர் என்ற பின்னொட்டை நீக்கவும் பரிந்துரை. அப்பகுதியில் உள்ள பவுத்தர்கள், இஸ்லாமியர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a Comment