கொல்கத்தா, ஜன.30 மேற்கு வங்க மாநிலம் உத்தர் தினாஜ்பூரில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் நடத்தும் பாரத்ஜோடோ நியாய நடைப் பயணத்தில் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று (29.1.2024) பங்கேற்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து அனை வரையும் அழைத்தார். 18 கட்சிகளும் அந்தக் கூட்டத் தில் பங்கேற்பதற்காக பாட் னாவுக்குச் சென்றோம். அதன் பிறகு, இண்டியாகூட்டணி உருவாகி பெங்களூரு, மும்பை என அடுத்தடுத்து ஆலோ சனைக் கூட்டத்தை நடத்தி னோம். நிதிஷ்குமார், அனைத்து கூட்டத்திலும் பங்கேற்றார். அவர் “இண்டியா” கூட்டணி யில் இருந்து உறவை முறித்துக் கொள்வார் என்று எந்தவித அறிகுறியையும் தரவில்லை. அவர் கடைசி நேரத்தில் நம் கையை விட்டு வெளியேறியது மிகவும் வருத்தமளிக்கிறது. இது முழுக்க முழுக்க நம்பிக்கை துரோகம்.
அவர் செய்த துரோகத் துக்கு பீகார் மக்கள் விரைவில் அவருக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்.
பச்சோந்தியே தோற்றுப் போகும் அளவுக்கு நிறம் மாறுகிறார் நிதிஷ் குமார். நான் வேறு என்ன சொல்ல முடியும்? குமார் வருவார், குமார் போவார் என்று நான் சொன்னேன். தற்போது பச் சோந்தியுடன் போட்டியிடும் அளவுக்கு நிறம் மாறுகிறார் பிஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார். அவர் அடிக்கடி பதவி விலகி செய்து, தனது அரசியல் நிறத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறார். அவர் எங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார். அதை நாங்கள் மறக்க முடி யாது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் கூறியதாவது: இவர்கள் (நிதிஷ் குமார்) நாள்தோறும் நிறம் மாறி வருகின்றனர். இதனால் பச் சோந்தி கூட புதிய நிறத்தைத் தேட வேண்டி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.