குலசேகரப்பட்டினத்தில் கலைஞர் நூற்றாண்டு –
சுயமரியாதை வீரர் சி.தெ.நாயகம் நூற்றாண்டு விழா
தூத்துக்குடி மாவட்டக் கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்
குலசேகரப்பட்டினம், ஜன.29- தூத்துக்குடி மாவட்டத் திராவிடர் கழகக் கலந் துரையாடல் கூட்டம் 21.1.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிய ளவில் குலசேகரபட்டினம் ஆ.கந்த சாமியின் ‘சூர்யா குளிர்பானக் கடையில்’ நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் மு.முனிய சாமி தலைமையேற்றார். மாவட் டச் செயலாளர் கோ.முருகன் அனைவரையும் வரவேற்றார். மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன் கூட்டத் தின் நோக்கம் பற்றியும், இன்றைய ஒன்றிய மதவாத பா.ஜ.க. ஆட்சி யின் மோசமான நடவடிக்கைகள், செயல்பாடுகள் பற்றியும், ஆனால் மக்களுக்கு ஏற்படும் தொல்லைகள் பற்றியும் விளக்கவுரையாற்றினார். எனவே, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் தலைவர் தலைமையில் பணியாற்றி ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியை அகற்றிடும் பணியினை வேகமாகச் செய்திடு வோம் என்றார். அடுத்து, தோழர் கள் அனைவரும் தங்கள் கருத்துக ளைத் தெரிவித்தார்கள். இறுதியா கக் கழகக் காப்பாளர் மா.பால் ராசேந்திரம் குலசேகரப்பட்டினம் சுயமரியாதை வீரர் சி.தெ.நாயகம் அவர்களின் இயக்கப் பணி பற்றி யும், முதல் இந்திய போராட்டத்தில் தந்தை பெரியாரால் முதல் சர் வாதிகாரியாக நியமிக்கப்பட்டுப்ய போராடியதோடு மட்டுமின்றி மேடையிலும் பேசி, கைது செய் யப்பட்டுச் சிறைசென்ற போராளி என்றும் கூறினார். பெண் கல்விக் காகவென்றே ஒரு கல்விக் கூடத்தை நிறுவிய பெருமகனார். அலுவலகப் பணி நிறைவுக்குப் பின்னும் தம் இறுதிக் காலம்வரை இயக்கப் பணி யாற்றிய செயல் வீரராவார். அவரு டைய ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் அன்னை மணியம்மையாரைச் சேர்த்து, பயிற்சி பெறச் செய்த பெருமைக்குரியவராவார். அய்யா சி.தெ.நாயகம் அவர்களை அவர் கள் பிறந்த மண்ணில் நூற்றாண்டு விழாவென அவர்களுக்குக் கொண் டாடி மகிழ்ந்திட முனைந்துள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களுக்கு மாவட்டக் கழகம் நன்றி தெரிவித்து மகிழ்கிறது எனக் கூறி நிறைவு செய்தார். அடுத்து சங்க ரேஸ்வரி நன்றி கூறக் கூட்டம் நிறைவு பெற்றது.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. முத்தமிழறிஞர் கலைஞ ரின் நூற்றாண்டு விழாவினையும், சுயமரியாதை வீரர் சி.தெ.நாயகம் அவர்களின் நூற்றாண்டு விழா வினையும் குலசேகரபட்டினத்தில் நடத்துவதற்கு வாய்ப்பளித்த தமிழர் தலைவர் அவர்களுக்கு இக்கூட்டம் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.
2. ‘தந்தை பெரியாரின் இறுதி முழக்கமும், தமிழர் தலைவர் அவர்களின் உறுதி முழக்கமும்‘, என்ற தலைப்பில் கிளைக் கழகங் கள் தோறும் கூட்டங்கள் நடத்து வதெனத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
3. தமிழர் தலைவர் அவர்கள் எந்தத் தேதியினைக் கொடுத்தாலும் அந்நாளில் கூட்டத்தினைச் சிறப் புடன் நடத்தித் தருவதென இக் கூட்டம் முடிவு செய்து, தீர்மானம் நிறைவேற்றியது.
4. புதிய பொறுப்பாளர்கள்:
குலசேகரப்பட்டினம் நகரத் திராவிடர் கழகத் தலைவராக ஆ.கந்தசாமி நியமிக்கப்பட்டார். நகரத் திராவிடர் கழக மகளிரணித் தலைவராக க.சங்கரேஸ்வரி நிய மிக்கப்பட்டார்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துகளைத் தெரிவித்த தோழர் கள் பகுத்தறிவாளர் கழக மாவட் டச் செயலாளர் சொ.பொன்ராஜ், மாவட்டத் துணைத் தலைவர் இரா.ஆழ்வார், தூத்துக்குடி மாந கரச் செயலாளர் செ.செல்லத்துரை, பெரியார் மய்யக் காப்பாளர் பொ. போஸ், வழக்குரைஞரணி ந.செல் வம், கி.கோபால்சாமி, வினோத், அறிவுச்சுடர் ஆகியோர் ஆவர்.
குலசேகரபட்டினம் வருகை தர விருக்கும் தமிழர் தலைவர் அவர் களுக்குச் சிறப்பான வரவேற்பளிக் கத் தூத்துக்குடி மாவட்டம் இப் போதே தயாராக இருக்கிறது.