காளையார்கோவில், ஜன. 29- சிவ கங்கை மாவட்டம், காளை யார்கோவில் ஒன்றியத்தில் 27.1.2024 அன்று காலை 9 மணியளவில் ஏ.எஸ்.கார்டன் மகாலில், தேர்வை எழுதுவது எப்படி? மற்றும் உயர்கல்விக் கான வழிகாட்டி நிகழ்ச்சி பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில அமைப்பாளர் ஒ.முத்துக்குமார் தலைமையில நடைபெற்றது.
இவ்வழிகாட்டி நிகழ்ச்சியா னது. காரைக்குடி (கழக) மாவட்ட பகுத்தறிவாளர் கழ கத்தின் மாவட்டச் செயலாளர், செல்வராசன், மாவட்ட ஆசிரி யரணி அமைப்பாளர் த.பால கிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்குமார், தேவ கோட்டை ஒன்றியத் தலைவர் தில்லை ஆகியோர் முன்னிலையில நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர்களாக சூசை ஆரோக்கிய மலர் (விரி வுரையாளர், அரசு மாவட்டக் கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், காளையார்கோவில்), புலவர் கா.காளி ராசா (ஆசிரி யர் பயிற்றுநர், கல்லல்), கலைத் தங்கம் (ஆசிரியர், அரசு மேல் நிலைப் பள்ளி, மறவமங்கலம்), ஜே.ஜேம்ஸ் (தலைவர், ரோட் டரி க்ளப் ஆப் சுப்ரீம்), நா.முத்துக்குமார் (செயலாளர், நகர் வர்த்தக சங்கம்) ஆகியோர் கலந்து கொண்டனர். ஒன்றியத் தலைவர் ராஜேஸ் வரவேற்றார். பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச் செயலாளர் முனைவர் மு.சு.கண்மணி தொடக்க உரை யாற்றினார்.
இவ்வழிகாட்டி நிகழ்ச்சி யில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற் பட்ட மாணவ-மாணவியர் களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் ஊக்கமூட்டும் பேச்சாளர் மற்றும் பயிற்சியாளர், திருச்சி சிபிஎஸ்இ தலைமைத் தேர்வா ளர் கருத்தாளர் அ.அந்தோணி சாமி, “உள்ளம் உறுதி பெற” என்ற தலைப்பில் தேர்வு குறித்த பயத்தை போக்கும் வகையில் மாணவர்களை திடப்படுத்தினார். மதுரை மனிதவள மற்றும் தொழில் முனைவோர் பயிற்சியாளர், கருத்தாளர் பேராசிரியர் திருக் கோஷ்டியூர் மணிகண்டன், “தேர்வை எதிர்கொள்வது எப்படி?” என்ற தலைப்பில் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற மாணவர்கள் தயாராவது பற்றியும், அதிக மதிப்பெண்கள் பெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் தெளிவுபடுத் தினார். மேலும் ”உயர்கல்விக்கு வழிகாட்டிட” என்ற தலைப் பில் உயர்கல்வியில் என்னென்ன பிரிவுகள் உள்ளன, என்னென்ன பணி வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்து விளக்கினார்.
இந்நிகழ்வில் திருநாவுக் கரசு, செந்தில், நகர் வர்த்தக சங்கம் பிரதிநிதிகள், பகுத்தறி வாளர் கழக ஒன்றியத் தலைவர் ரஞ்சன், செயலாளர் ஜெரோம், தோழர்கள் மாதவன், அரவிந்த், திராவிடர் கழக மாவட்ட காப் பாளர் சாமி.திராவிடமணி, மாவட்டதலைவர் ம.கு.வைகறை, மாவட்ட துணைத்தலைவர் கொ.மணிவண்ணன் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண் டனர். இறுதியாக பகுத்தறி வாளர் கழக ஒன்றிய துணைச் செயலாளர் ரஞ்சன் நன்றி கூறினார்.