மங்கள்யான்-2 விண்கலம் மூலம் செவ்வாய் கோளை ஆய்வு செய்ய உள்ளதாகஇஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
மங்கள்யான் விண்கலம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு மங்கள்யான் விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இதன் மூலம் தன்னுடைய முதல் முயற்சியில் செவ்வாய் கோளின் சுற்றுப்பாதையில் நுழைந்து விண்வெளித்துறையில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நாடுகளை இந்தியா திரும்பிப் பார்க்க வைத்தது.
இந்தியாவின் மங்கள்யானின் முதல் செவ்வாய் பய ணத்தின்போது, மேற்பரப்பு அம்சங்கள், உருவவியல், கனிமவியல் மற்றும் செவ்வாய் வளிமண்டலம் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக 5 அறிவியல் கருவிகள் (பேலோடுகள்) எடுத்துச்சென்று ஆய்வு செய்தது. இதன் மூலம் பல்வேறு அறி வியல் தகவல்கள் கிடைக்கப்பெற்றன. செவ்வாய் கோளிற்கு மற்றொரு விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ தயாராகி வருகிறது. செவ்வாய்க் கோளுக்கு விரைவில் 2ஆவது விண் கலமான ‘மங்கள் யான்-2’அய் இஸ்ரோ அனுப்ப உள்ளது.
‘மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்-2′ என்தே ‘மங்கள் யான்-2′ விண்கலம் என்று அழைக்கப்படுகிறது. சிவப்பு கோளுக்கு 4 கருவிகளை (பேலோடுகள்) சுமந்து செல்லும் இந்த விண்கலம் செவ்வாய் கோளின் அம்சங்களையும், கோள்களுக்கு இடையேயான தூசியையும், செவ்வாயின் வளிமண்டலம் மற்றும் சுற்றுச்சூழலையும் ஆய்வு செய்யும். இந்த பணியானது செவ்வாய் கோளின் சுற்றுப்பாதை தூசி பரிசோதனை, “ரேடியோ ஆக்ல்டேஷன்’ பரிசோதனை, ஆற்றல் மிக்க‘அயன் ஸ்பெக்ட்ரோ மீட் டா மற்றும் ‘லாங்முயர்’ ஆய்வு மற்றும் மின்சார புல பரிசோதனை ஆகிய வற்றை கொண்டு செல்லும்.
செவ்வாய் கோளில் சிறந்த பட ங்கள்
இதில் உள்ள ‘மோடக்ஸ்’ என்ற கருவி செவ்வாய் கோளின் அதிக உயரத்தில் உள்ள தோற்றம், மிகுதி, வினியோகம் உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ளும் வகையில் இதனுடைய ஆய்வு இருக்கும். நடுநிலை மற்றும் எலக்ட்ரான் அடர்த்தி சுயவிவரங் களை அளவிட ஆர்.ஓ. பரிசோதனை செய்கிறது.
இந்த கருவியானது. செவ்வாய் கோளின் வளிமண்டலத்தின் நடத்தையை புரிந்து கொள்ள உதவும்‘எக்ஸ்-பேண்ட்’ அலை வரிசையில் இயங்கும் ‘மைக்ரோவேவ் டிரான்ஸ்மீட்டர்’ ஆகும். சிவப்பு கோளின் வளி மண்டலத்தின் இழப்பை புரிந்து கொள்ள, செவ்வாய் கோளில் சூரிய ஆற்றல் துகள்கள் மற்றும் சூப்பர் வெப்ப சூரியக்காற்றின் துகள்களை வகைப்படுத்து வதற்கு இந்த ஆய்வுகள் மூலம் பல கண்டுபிடிப்புகளை உருவாக்க இஸ்ரோ திட்ட மிட்டுள்ளது. எல்.பி. எக்ஸ். என்ற கருவி எலக்ட்ரான் எண் அடர்த்தி, எலக்ட்ரான் வெப்பநிலை மற்றும் மின்சார புல அலைகளை அளவிடு வதற்கு உதவும்.
இவை அனைத்தும் செவ்வாய்கோளில் உள்ள பிளாஸ்மா சூழலின் சிறந்த படத்தையும் எடுத்து பெங்களூரு வில் உள்ள இஸ் ரோவின் தரை கட்டுப் பாட்டு மய்யத்திற்கு அனுப்பி வைக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.