பொதுவாக அன்னாசிப் பழத்தில் நம் உடலுக்குத் தேவையான வைட்டமின், தாதுக்கள் நிறைந்துள்ளது. இந்த பழம் நமக்கு மூட்டுவலி வராமல் பாதுகாத்து, நமக்கு மலச் சிக்கல் வராமல் தடுக்கிறது. மேலும் இந்த பழம் நமக்கு தொப்பை போடாமல் பாதுகாக்கும். எலும்பு வளர்ச்சிக்கு உதவும் மேலும் இந்த பழத்தின் நன்மைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
1. அன்னாசிப்பழத்தில் உள்ள செரிமான நொதிகள் நம் குடல் செரிமானத்திற்கு உதவுகிறது.
2. அன்னாசிப்பழத்தின் தண்டு, பழம் மற்றும் சாறு ஆகியவற்றில் இந்த நொதிகள் காணப்படும்.
3. இந்த நொதிகள் புரதங்களின் செரிமானத்திற்கு உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
4. அன்னாசிப்பழம் உடல் எடையை குறைக்கவும் உதவும்.
5. செரிமானமின்மை, வீக்கம் மற்றும் வாயு போன்ற செரிமானப் பிரச்சினைகளுக்கு இந்த பழம் உதவும்.
வேதிப்பொருள் கொண்ட வெள்ளரி
*அழகு, ஆரோக்கியம் இவை இரண்டையும் அள்ளித் தரும் வெள்ளரிக்காய் கோடையில் ஏற்படும் சோர்வை போக்கி குளுமை தருவதோடு நம் உடலின் தோற்றத்தையும், தோலின் மென்மையையும் மேம்படுத்தும்.
*முழுவதும் நீர்ச்சத்தைக் கொண்டுள்ளது வெள்ளரிக் காய். சிறிதளவு மாவுச் சத்தும், புரதச் சத்தும் இருந்தாலும் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன.
*குடலில் எளிதாக செரிமானமாக்கூடிய நார்ச்சத்தையும் பெற்றுள்ளது. மிக மிகக் குறைந்த அளவில் கொழுப்பு சத்து உள்ளது.
*வெள்ளரிக் காயில் காணப்படும் குக்கர்விட்டேசின் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்த வேதிப் பொருளாகும்.
*உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் உள்ளோர் அன்றாடம் தாங்கள் சாப்பிடும் உணவில் 100 கிராம் அளவு திட உணவைக் குறைத்து அதற்குப் பதில் வெள்ளரிக்காயை உண்பதால் நல்ல பலன் காணலாம்.