மருத்துவர் நிலவு பூ.கணேசன் மருமகனும், கடலூரின் பிரபல குழந்தை நல மருத்துவருமான வெ.நமச்சிவாயம் (வயது 81) 26.1.2024 அன்று மறைவுற்றார். அவரின் இறுதி ஊர்வலம் 28.1.2024 அன்று காலை 10 மணிக்கு கடலூரில் நடைபெற்றது. அவரின் உடலுக்கு கழகத்தின் சார்பில் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன், மாநகர கழகத் தலைவர் தென் சிவக்குமார், மாவட்ட கழக செயலாளர் எழிலேந்தி ஆகியோர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.