காந்தியார் குறித்து ஆளுநர் பேச்சு வன்மம் கலந்த நோக்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

3 Min Read

சென்னை, ஜன. 29- திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
என் மதத்தின் மீது சூளு ரைத்தே சொல்கிறேன். என் மதத்திற்காக நான் உயிர் துறக்க வும் தயார். ஆனால் அது என் னுடைய சொந்த விவகாரம். அதில் அரசுக்கு எந்தச் சம்பந்த மும் இல்லை என்று நிமிர்ந்து சொன்னவர் காந்தியார். தன்னை ஹிந்து என்று அடையாளப் படுத்திக் கொண்டவர். அதே நேரத்தில் தன்னைப் போலவே அனைத்து மதத்தவர் உணர் வுக்கும் மரியாதை கொடுத்தவர் அவர். அனைத்து மதங்களும் ஒரே நோக்கம் கொண்டவை என்றவர் அவர்.

அரசு, தமிழ்நாடு

ஒற்றை மதவாத தேசியவா தத்தை காந்தியார் ஏற்கவில்லை. அதனாலேயே மதவெறிக்கு காந்தியார் பலியானார். 75 ஆண்டுகள் ஆனபிறகும் காந் தியார் மீதான கோபம், வகுப்பு வாதிகளுக்கு குறையவில்லை. வாய்ப்புக் கிடைக்கும் போதெல் லாம் காந்தியாரை வலதுசாரி சக்திகள் இழிவுபடுத்துவது தொடர்கதை! ‘காந்தியால் இந்த நாட்டுக்குச் சுதந்திரம் கிடைக்க வில்லை’ என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சொல்லி இருப்பதும் இதே வன்மம் கலந்த நோக்கத்துடன்தான்.

தேசத்தந்தை என்று போற்றப் படும் காந்தியாரை, பொய்களா லும் அவதூறுகளாலும் கொச் சைப்படுத்தும் காலமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவரது கொள்கைகள் மட்டுமல்ல, அவரே இழிவுபடுத்தப்படுகிறார். இது நிகழ்காலம் எவ்வளவு வகுப்பு வாதச் சகதியில் சிக்கி இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகும். இதனை உடனே தடுத்தாக வேண்டும்.
மதநல்லிணக்கத்தின் அடையாளமான காந்தியார் மத வெறியர்களால் கொல்லப்பட்ட வருகிற 30ஆம் நாளை, நாடு முழுவதும் மதநல்லிணக்க நாளாகக் கடைப்பிடிக்க வேண்டி யது நம் அனைவரின் கடமை யாகும். மதச்சார்பற்ற ஜனநாயகச் சக்திகள் இதில் கவனம் செலுத் தியாக வேண்டும். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டுக்கு இந்தக் கடமை அதிகம் இருக்கிறது. எனவே, வருகிற 30ஆம் நாளன்று மதநல்லிணக்க உறுதி மொழியை அனைவரும் எடுத் துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியா முழுமைக்குமான ஒற்றுமையின் அடையாளமாக இருக்கின்ற காந்தியாரின் புகழைச் சிதைப்பதன் மூலமாக இந்திய நாட்டின் பன்முகத் தன் மையை சிதைக்க முயற்சிக்கிறார் கள். காந்தியாரின் பிறந்தநாளை ‘சுவச்ச பாரத் அபியான்’ என மாற்றியதில் இருக்கிறது இவர் களது அழித்தல் வேலைகள். இது காந்தியாரின் அனைத்து அடையாளங்களையும் அழித் தல் ஆகும். அதே போன்ற காரியத்தைத்தான் அக்டோபர் 2-ஆம் நாள் ஊர்வலம் நடத்து வதன் மூலமாக ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பு திசைதிருப்பப் பார்த்தது. அதனைத் தமிழ்நாடு அரசு அனுமதிக்கவில்லை.எத் தகைய திரைமறைவு வேலைகள் பார்த்தாலும், மக்களின் மனதில் குடியிருக்கிறார் காந்தியார்.
நாடு சந்தித்து வரும் மதவெறி – பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகவும், நாட்டு மக்கள் அனைவரும் மத வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்ந்திட வேண் டும் என்பதையும் வலியுறுத்தும் வகையிலும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை ஜனவரி 30 அன்று மாவட்ட திமுகவினர் நடத்திட வேண்டும். இதில் அனைத்து

மதங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளையும் பங்கேற்கச் செய்ய வேண்டும்.
வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்திய நாட்டின் பண் பாட்டையும், ‘எல்லோர்க்கும் எல்லாம்’ என்ற தமிழ்நாட்டின் மாண்பையும் இந்திய ஒன்றியத் திற்கு வெளிப்படுத்தும் வகை யில் நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக திட்டமிட்டு நடத்திட வேண்டும். மதவெறியை மாய்ப்போம், மனித நேயம் காப்போம்! வாழ்க காந்தியாரின் புகழ்!. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *