திருவாரூர்,ஜன.28- தமிழ்நாட்டில் மேலும் 4,200 பேருந்துகள் பயன் பாட்டுக்கு வர உள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவ சங்கர் தெரிவித்துள்ளார்.
ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட வேண்டும் என்ற அறிவிப்புக்கு 90% பேர் ஆதரவு தெரிவித் துள்ளனர்.
கோயம்பேட்டில் ஆம்னி பேருந்துகள் முன் பதிவிற்கு 5,000 சதுர அடி இடமே இருந்தது.
ஆம்னி பேருந்துகளை நிறுத்துவதற்கு 7,000 சதுர அடி நிலம் ஒதுக்கப் பட்டுள்ளது. 300 பேருந் துகளை நிறுத்தும் அள விற்கு கிளாம்பாக்கத்தில் நிறுத்துமிட வசதி உள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்யப்பட் டுள்ளது. ஓரிரு ஆம்னி பேருந்து உரிமையாளர் கள் தேவையின்றி பேசு வதை தவிர்த்து ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும்.
மார்ச் மாத இறுதிக் குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழு மையாக தயாராகிவிடும். கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு பகுதி களுக்கு கூடுதலாக 200- நடை பேருந்துகள் இயக் கப்பட்டுள்ளன.
சோழிங்கநல்லூரில் இருந்து கிளாம்பாக்கத் திற்கு சிறப்புப் பேருந்து கள் இயக்கப்பட்டு வருகின்றன.
பயணிகள் சிரமமின்றி பயணிக்க தேவையான நடவடிக்கைகளை போக்குவரத்துத் துறை எடுத்து வருகிறது. இந் நிலையில் திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச் சர் சிவசங்கர்; தமிழ்நாட் டில் மேலும் 4,200 பேருந் துகள் பயன்பாட்டுக்கு வர உள்ளது, கிளாம்பாக் கத்தில் இருந்து தாம்பரம், கிண்டி, கோயம்பேட்டிற்கு தொடர்ச்சியாக மாநகர பேருந்துகள் இயக்கப் படும். கிளாம்பாக்கத்தில் ஆட்டோக்களை முன் பதிவு செய்வதற்கான ஏற் பாடுகளும் நடைபெற்று வருகின்றன. -இவ்வாறு தெரிவித்துள்ளார்.