தாழ்த்தப்பட்டோர் – பழங்குடியினர் தொழில் முனைவோர் கண்காட்சி அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

2 Min Read

சென்னை, ஜன.28- சென்னை வர்த்தக மய்யத்தில் தாழ்த்தப்பட் டோர், பழங்குடியினர் தொழில் முனைவோர் கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தாழ்த்தப்பட்டோர் சமூகம் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கான கண்காட்சி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மய்யத்தில் 26.1.2024 அன்று தொடங்கியது.

2 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை தமிழ்நாடு இளை ஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் பேசியதாவது,
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங் குடியின நலத்துறை சார்பாக, தமிழ் நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற் றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) தென்னிந்திய வரலாற்றில் முதல் முறையாக தமிழ்நாட்டில் தாழ்த் தப்பட்டோர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கான கண்காட்சி தொடங்கி வைக்கப்பட் டுள்ளது.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர்கள் வாழ்வாதா ரத்தை மேன்மைப்படுத்திட ஏது வாக முதலமைச்சரின் ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற் கான தொழில் முனைவு திட்டம், சுயஉதவிக்கான பொருளாதார கடனுதவி திட்டம், துரித மின் இணைப்பு திட்டம், நிலம் வாங்கும் திட்டம், மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் திட்டங்கள் உள்ளிட் டவைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்கள் மூலமாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களை தொழில் முனை வோர்களாக்க அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இக்கண்காட்சியில் ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடி யினரால் தயாரிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்களானது 410 அரங்குகளிலும், வணிக நிறுவனங் களால் தயாரிக்கப்பட்ட மோட் டார் வாகன உதிரிப் பாகங்கள், ரசாயனப் பொருட்கள், மின் மற் றும் மின்னணுவியல், வேளாண் மைக் கருவிகள், கட்டுமான தொழில் சார்ந்த உபகரணங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் என 187 அரங்குகள். அரசு பொதுத் துறையை சார்ந்த பூம்புகார் நிறு வனம், தமிழ்நாடு மின ரல்ஸ் லிமிடெட், சிறுதொழில் வளர்ச் சிக் கழகம், ஆவின், போன்ற 28 அரங்குகள் மேலும், தேசிய மயமாக் கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகள் மூலம் 10 அரங்குகள் பொதுமக்களின் பார்வைக்காக அமைக்கப்பட்டுள் ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் கள் தா.மோ.அன்பரசன், என்.கயல் விழி செல்வராஜ், தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழக தலைவர் உ.மதி வாணன். சட்டமன்ற உறுப்பினர் கள் தாயகம் கவி,இ.பரந்தாமன், ஆ.வெங்கடேசன், மு.கே.கிரி, அமுலு விஜயா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் க.லட்சுமி பிரியா, தாட்கோ மேலாண்மை இயக்குநர் க.சு.கந்தசாமி, ஆதிதிராவிடர் நலத் துறை இயக்குநர் த.ஆனந்த், பழங் குடியினர் நலத்துறை இயக்குநர் அண்ணாதுரை மற்றும் தொழில் முதலீட்டாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *