கடலூர், ஜன.28- சிதம்பரம் ரிஜிஸ்ட்ரார் சு.பூவராகன் அவர்களின் பேத்தி பூங்கொடியின் கணவரும், நிலவு பூ. கணேசனின் மூத்த மருமகனுமான கடலூர் குழந்தைகள் மருத்துவ நிபுணர் வெ.நமச்சிவாயம் (வயது 81) அவர்கள் நேற்று (27.1.2024) பிற்பகல் 3.00 மணியளவில்இயற்கை எய்தினார் என்பதை அறி விக்க வருந்துகிறோம்.
சுயமரியாதை இயக்கக் குடும்பத்தில், நிலவு. பூ.கணேசனின் மூத்த மகள் பூங்கொடி- மருத்துவர் வெ.நமச்சிவாயம் இணையரின் திருமணம் நாவலர் தலைமையில் கடலூரில் நடைபெற்றது.
கடலூர் மாநகரில் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவராகத் திகழ்ந்து மிகவும் பிரபலமானவர். சேவை மனப்பான்மையுடனும், பகுத்தறிவுக் கொள்கையுடனும், முத்தமிழறிஞர் கலைஞர், இனமானப் பேராசிரியர், ஆசிரியர் கி.வீரமணி மற்றும் திராவிட இயக்கத் தலைவர்களுடன் கொள்கை வழி உறவினராகத் திகழ்ந்தவர் மருத்துவர் வெ.நமச்சிவாயம் ஆவார்.
இவருக்கு மருத்துவர் ந.பூங்குழலி கோபிநாத் என்ற மகளும், மருத்துவர் ந.பூங்குன்றம் என்ற மகளும் உள்ளனர்.
செய்தியறிந்து கழக நிர்வாகிகளும், திராவிட இயக்கச் சிந்தனையாளர்களும், பொதுமக்களும் திர ளாகச் சென்று மரியாதை அஞ்சலி செலுத்தினர்.
அவரது இறுதி ஊர்வலம் நாளை (29.1.2024)காலை 10 மணியளவில் ரங்கநாதன் நகர் கடற்கரைச் சாலை, கடலூர் எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்திலிருந்து புறப்பட்டு அங்குள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
மருத்துவர் வெ.நமச் சிவாயம் மறைவையொட்டி, அவர்தம் குடும்பத்தினரு டன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தமி ழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித் தார்.