தமிழ்நாடு நீதித்துறை நியமனங்களும், சமூகநீதியும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வேண்டுகோள்-சிறப்புக் கூட்டம்

viduthalai
3 Min Read

தமிழ்நாடு நீதித்துறை நியமனங்களும், சமூகநீதியும்
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வேண்டுகோள்-சிறப்புக் கூட்டம்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, நீதிபதி து.அரிபரந்தாமன் சிறப்புரை

திராவிடர் கழகம்
சென்னை,ஜன.28- -தமிழ்நாடு நீதித் துறை நியமனங்களும், சமூகநீதியும்- சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வேண்டுகோள் எனும் தலைப்பில் திராவிடர் கழகத்துடன் இணைந்து திராவிடர் கழக சட்டத் துறை, பகுத்தறிவாளர் கழகம், சமூக நீதிப்பேரவை, சமூக நீதிக்கான வழக் குரைஞர்கள் சங்கம் நடத்திய சிறப்புக் கூட்டம் சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நேற்று (27.1.2024) மாலை நடை பெற்றது.
‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ நிர்வாக ஆசிரியரும் கழகப் பொருளாளருமான வீ.குமரேசன் அனைவரையும் வர வேற்றார். கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார்.

திராவிடர் கழகம்
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி நீதிபதி து.அரிபரந்தாமன் ஆகியோர் ஆற்றிய சிறப்புரையில் நீதித்துறையில் சமூக நீதி கடைப்பிடிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துக்கூறியதுடன், நீதித்துறையில் நீதிபதிகள் நியமனங் களில் அனைவருக்கும் அனைத்தும் என்கிற வகையில் பன்முகத்தன் மையுடன் பட்டியல் இனத்தவர், பழங்குடியினத் தவர், பிற்படுத்தப்பட்டவர்கள், அனைத்து வகுப்பினரையும் உள்ளடக்கிய பெண்கள் மற்றும் சிறுபான்மையர்கள் ஆகியோருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.
245 நீதிபதிகள் காலிப் பணியிடங்களை நிரப்புவதில் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்காணல் நடைபெற உள்ளது. எழுத்துத் தேர்வில் தேவையான மதிப் பெண்கள் பெற்றாலும், நேர்காண லிலும் தேவையான மதிப்பெண்கள் பெற்றால்தான் நீதிபதிகளாக நியமனம் பெற முடியும்.
நியமனம் செய்வதற்கான நேர் காணல் குழுவில் 4இல் 2பேர் பார்ப் பனர்களாக இருப்பதும், அதிலும் குறிப்பிட்ட ஆர்.எஸ்.எஸ். மனப்பான் மையுடன் தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ள பார்ப்பனர் ஒருவர் அக்குழுவில் இடம்பெற்றுள்ளதையும் சுட்டிக்காட்டி, அதனை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் பார்வைக்கு கொண்டு செல்வதுடன், உரிய மாற்றங் களை உடனடியாக செய்யவும் வலியு றுத்தி, உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை சுட்டிக்காட்டி அதனைப் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்திக் குறிப்பிட்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
நீதிமன்றங்களில் சமூக நீதி இல்லாததை சுட்டிக்காட்டியும், நீதித் துறையில் அரசமைப்புச்சட்டப்படி சமூக நீதி கடைப்பிடிக்கப்பட வேண்டிய அவசியம் குறித்தும், பல்வேறு ஆதாரபூர் வமான தகவல்களை எடுத்துக்காட்டி சிறப்புரை ஆற்றினார்கள்.
மேலும் மிகக் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புக் கூட்டத்தின் நோக்கத்தையும் அவசியத் தையும் விளக்கி கூறினார்கள்.
புத்தக வெளியீடு
‘இராமாயணம்’ தொடர்பான இயக்க வெளியீடுகளான ஏழு புத்த கங்கள் நன்கொடை மதிப்பு ரூ.525. சிறப்புக்கூட்டத்தில் ரூ.125 தள்ளுபடி செய்து ரூ.400க்கு வழங்கப்பட்டது. கழகத் தோழர்கள் உள்பட பலரும் வரிசையில் சென்று புத்தகங்களை உரிய தொகை கொடுத்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.
கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், தமிழ்நாடு மாநில வளர்ச்சி குழு துணைத் தலைவர் பொருளாதார வல்லுநர் ஜெயரஞ்சன், வழக்குரைஞர் சு.குமாரதேவன், தலை மைக் கழக அமைப்பாளர்கள் வி.பன்னீர்செல்வம், தே.செ.கோபால், வழக்குரைஞரணி மாநில அமைப் பாளர் ஆ.வீரமர்த்தினி, சி.வெற்றி செல்வி, தங்க.தனலட்சுமி, பூவை செல்வி, மாணவர் கழகம் தொண்டறம், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, கோ.வீ.ராகவன், திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் வெ.மு.மோகன், வடசென்னை மாவட் டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், பகுத்தறிவாளர் கழகம் மு.இரா.மாணிக்கம், பெரியார் மாணாக்கன், இளைஞரணி மாநில துணை செயலாளர் சோ.சுரேஷ், மயிலை பாலு, பிடிசி இராமச்சந்திரன், ஆவடி வை.கலையரசன், க.கலைமணி, தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன் ராஜ், தாம்பரம் மாவட்ட தொழிலாள ரணி தலைவர் மா.குணசேகரன், படப்பை சந்திரசேகர், கருப்பைய்யா, பல்லாவரம் நகர இளைஞரணி அமைப்பாளர் ச.அழகிரி (எ) நரேஷ், ந.கதிரவன், உத்திரகுமார், அன்பரசன், ஜீவானந்தம், தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ரங்கநாதன் உள்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர் களும் சிறப்புக்கூட்டத்தில் பங்கேற் றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *