திண்டிவனம், ஜன. 27- திண்டிவனம் கழக மாவட்ட திராவிடர் கழகம் நடத்திய பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 40 மாணவர்களுடன் மிக எழுச்சியுடன் இன்று (27-1-2024) நடைபெற்றது
மாவட்டக் கழகச் செயலாளர்
செ. பரந்தாமன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
தலைமைக் கழக அமைப்பாளர் தா. இளம் பரிதி பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
மாவட்டத் தலைவர் இர.அன்பழகன் தலைமையேற்று உரையாற்றினார்.
மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, மாநில இளைஞரணி துணை செயலாளர் வழக்குரைஞர் தா.தம்பிபிரபாகரன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் நவா. ஏழுமலை, மாவட்ட அமைப்பாளர் பா.வில்ல வன்கோதை, திண்டிவனம் நகரத் தலைவர் பச்சையப்பன், வானூர் ஒன்றிய தலைவர் தி.க.அன்பரசன், மயிலம் ஒன்றிய செயலாளர் ச.அன்புக்கரசன், மாவட்ட இளைஞரணி தலைவர் மு.ரமேஷ், விழுப்புரம் நகர செயலா ளர் பழனிவேல் ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினார்கள்
பகுத்தறிவாளர் கழக ஊடகப்பிரிவு மாநில தலைவர் மா.அழகிரிசாமி Ôதந்தை பெரியார் ஓர் அறிமுகம்Õ என்ற தலைப்பில் முதல் வகுப் பெடுத்தார்.
கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் Ôஇந்து, இந்துத்துவா, ஆர்.எஸ்.எஸ்Õ என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார்.
கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணா நிதி Ôசமூகநீதி வரலாறுÕ என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார்.
கிராம பிரச்சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் க. அன்பழகன் Ôபார்ப்பன பண் பாட்டு படையெடுப்புகள்Õ என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலியில் மாணவர்களிடையே உரையாற்றினார்.
எழுத்தாளர் வி.சி.வில்வம் Ôதமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தனித்தன் மைகள்Õ என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார்
கிராம பிரச்சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் க.அன்பழகன் Ôபெரியாரின் பெண்ணுரிமை சிந்தனைகள்Õ என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார்.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் பெரியாரியல் பயிற்சி பட்டறை பொறுப்பாளர் இரா.ஜெயக்குமார் நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினார்.
திண்டிவனத்தில் 40 மாணவர்களுடன் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை எழுச்சியுடன் தொடங்கியது
Leave a Comment