பள்ளி இறுதித்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஊக்கத்தொகை சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டது

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரசு, தமிழ்நாடு

சென்னை, அக்.13 சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்று எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் சிறப்பு மதிப்பெண்கள் பெற்ற 707 மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் கே.என். நேரு ஊக்கத் தொகை வழங்கினார்.

மாநகராட்சி வளாக கூட்டரங் கில் நேற்று (12.10.2023) நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் சிறப்பு மதிப்பெண் பெற்ற 324 மாணவர்கள் மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் சிறப்பு மதிப் பெண் பெற்ற 383 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார். இதே போல, மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்த 494 ஆசிரியர்களுக்கும் ஊக்கத் தொகைகளை வழங்கினார். தொடர்ந்து, பசுமைப் பரப்பளவை அதிகரிக்கும் வகையில் மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. 

பின்னர், அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:- சென்னை பள்ளி களில் பயின்று 2023-ஆம் ஆண்டு அரசு பொதுத்தேர்வில் சிறப்பு மதிப்பெண் பெற்ற 707 மாண வர்கள் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த 494 ஆசிரியர்களுக்கு மொத்தமாக ரூ.30 லட்சத்து 64 ஆயிரத்து 500 ஊக்கத்தொகையும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட் டுள்ளது. மேலும், சென்னை பள்ளிகளில் பிளஸ்-2 பயின்று 2022-_2023ஆ-ம் கல்வியாண்டில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதலாம் ஆண்டு மருத்துவம் பயில ஒரு மாணவருக்கு ரூ.45 ஆயிரம், பொறியியல்  பயில 87 பேருக்கு ரூ.39 லட்சத்து 15 ஆயிரம், கலை மற்றும் அறிவியல் பயில 150 பேருக்கு ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் என வழங்கப் பட்டுள்ளது. 

சாலை பணிகள்

இதேபோல, வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு சென்னை மாநகராட்சியில் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை மேற் கொள்வது குறித்து சேவைத்துறை அதிகாரிகளுடன் கூட்டம் நடத் தப்பட்டுள்ளது. 2 மாதங்களுக்கு சாலை வெட்டு பணிகளை மேற் கொள்ளக்கூடாது என அறிவுறுத் தப்பட்டுள்ளது. புதிதாக சாலை வெட்டுப் பணிகள் மேற்கொள்ளாமல், ஏற்கனவே நடைபெறும் சாலை வெட்டு பணிகளை விரைந்து முடிக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

தமிழ்நாடு மின்வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் முடியும் நிலையில் உள்ளது. சென்னை மாநகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் 3 ஆயிரத்து 877 சாலைப் பணிகள் முடிவுற் றுள்ளன. நாள்தோறும் சராசரி யாக 70 சாலைகளை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கெனவே ஒப்பந்தம் போடப்பட்ட அனைத்து சாலைப் பணிகளும் இன்னும் ஒருவார காலத்திற்குள் முடிக்கப்பட்டு விடும். மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்கவும் அறி வுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *