27.1.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஆர்.எஸ்.எஸ். கைப்பாவையாக பிரதமர் மோடி செயல்படுகிறார், மல்லிகார்ஜூனா கார்கே கடும் தாக்கு.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* குடியரசு தின விழாவினையொட்டி ஆளுநர் அளித்த விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலை வர்கள் கலந்து கொள்ளவில்லை.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* சிறிய கட்சிகளை ஒருங்கிணைப்பது காங்கிரசின் முக்கிய பொறுப்பாகும் என அகிலேஷ் கருத்து.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* சிறுபான்மை ஒருங்கிணைப்புக் குழுவின் (எம்சிசி) அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி, 2022ஆம் ஆண்டில் சிறுபான்மை சமூகங்கள் மீது குறிவைத்து 55 தாக்குதல்கள் குஜராத் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.
தி இந்து:
* பிரதமரை தலைமைப் பூசாரியாகக் கொண்டு நாட்டை வழி நடத்த முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கடும் தாக்கு.
* மோடி அரசு கொண்டு வர இருக்கும் ஒளிபரப்பு மசோதா, பத்திரிகை சுதந்திரம், பேச்சு சுதந்திரம், படைப் பாற்றல் சுதந்திரம் ஆகியவற்றை சீர்செய்ய முடியாத வகையில் சேதப்படுத்தும் என ஊடக பெண்கள் அமைப்பு குற்றச்சாட்டு.
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a Comment