காஞ்சிபுரம், ஜன. 27- காஞ்சிபுரம், ஓரிக்கை, கண்ணகிபுரத்தில், காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அ.வெ. முரளி – மு. தவமணி ஆகியோரின் ‘குறளகம்’ இல் லத் திறப்பு விழா 5.1. 2024 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் நடைபெற்றது.
அ.வெ.சிறீதர் அனைவரையும் வர வேற்று உரையாற்றினார். எழுச்சிப் பாடகர் உலக ஒளி பெரியார் குறித்து பாடல்கள் பாடினார். விழாவிற்கு திராவிட முன்னேற்ற கழகச் சொற்பொழிவாளரும் அறிவு வளர்ச்சி மன்றத்தின் அமைப்பாளருமான நாத்திகம் நாகராசன் தலைமை வகித்து மூடப்பழக்கங்கள், சடங்குகள் குறித்து மக்கள் சிந்தனையைத் தூண்டும்படி நகைச் சுவையாக உரையாற்றினார்.
திருவள்ளூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் மா. மணி, செய் யாறு கழக மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அ. இளங்கோவன், காஞ்சிபுரம் மாவட்ட திராவிட கழகச் செயலாளர்
கி. இளையவேள், இணைச் செயலாளர்
ஆ. மோகன், இராணிப்பேட்டை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சு. லோகநாதன், திருவள்ளூர் மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திராவிடர் கழகத்தின் தலைமை கழக அமைப்பாளர் அரக்கோணம் பு.எல்லப்பன் புதிய இல்லத்தின் மேலே அமைக்கப்பட்ட கொடிக் கம்பத்தில் கழகக் கொடியை ஏற்றி வைத்தார்.
பெரியார் உலகம்
‘குறளகம்’ என்ற புதிய இல்லத்தை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் திறந்து வைத்தார். அவர் தம் உரையில், அனைத்து அமைப்புகளையும் இணைத்து நடத்தும் குடும்ப விழா என்றும் அனைத்து அமைப்புகளும் இணைந்து, வரும் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியை ஒழிக்கப் பாடுபட வேண்டும் என்றும், தந்தை பெரியார்வழி வாழும் அ.வெ. முரளி – மு. தவமணி இணைய ருக்கும் செல்வங்களான மு. குறளரசு, மருத் துவர் மு. குழலரசி, மு. எழிலரசி ஆகியோ ரின் கனவு இல்லம் என்றும், அண்ணாவின் ஆட்சியில் சுயமரியாதைத் திருமணச் சட்டம், இருமொழிக் கொள்கை, தமிழ்நாடு பெயர் சூட்டல் ஆகிய சாதனைகள் குறித் தும் முத்தமிழறிஞர் கலைஞர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் பெரியார் வழி ஆட்சி குறித்தும் பெரியார் உலகம் பற்றிக் குறிப்பிட்டு, ‘குறளகம்’ சிறக்க வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பா ளரும் கழகச் சொற்பொழிவாளருமான முனைவர் காஞ்சி பா. கதிரவன், தமிழர் தலைவர் கூடத்தைத் திறந்து வைத்து , மார்கழி மாதத்தில் மூடத்தனங்கள் இல்லா மல், பார்ப்பனரின்றி, தீ மூட்டி, சமஸ்கிருத மந்திரங்கள் ஓதாமல், குடும்பங்கள் சூழ நடக்கும் கொள்கைத் திருவிழா என்றும் தமிழர்கள் பார்ப்பனர்களை அழைக்காமல் தங்கள் இல்ல நிகழ்ச்சிகளை நடத்த வேண் டும் என்றும் குறிப்பிட்டார்.
திராவிட இயக்க முன்னோடிகள்
திராவிட இயக்க முன்னோடிகளின் படங்களைத் திறந்து வைத்து, உத்திரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க. சுந்தர், காஞ்சிபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர், சி.வி.எம்.பி. எழிலரசன், காஞ்சிபுரம் ஒன்றியக் குழு பெருந்தலைவர் மலர்கொடி குமார், பொதுவுடைமை இயக்கத் தோழர் கமலநாதன், தமிழர் உரிமைக் கூட்டமைப்பின் காஞ்சி அமுதன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
திராவிட இயக்க முன்னோடிகளான புத்தர், திருவள்ளுவர், காரல் மார்க்ஸ், அயோத்திதாசர், ரெட்டைமலை சீனிவா சன், வ. உ. சிதம்பரனார், தந்தை பெரியார், சிங்காரவேலர், ஜீவானந்தம், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா, புரட்சிக் கவிஞர் பாரதி தாசன், அன்னை மணியம்மையார், முத் தமிழறிஞர் கலைஞர், பேராசிரியர் க. அன் பழகன், செந்தமிழ் செல்வர் சி.வி.எம். அண் ணாமலை, டி.ஏ கோபாலன், கே.டி.எஸ். மணி, அ.வேங்கடபதி – பச்சையம்மாள், க.ஏழுமலை ஆகியோரின் படங்கள் திறந்து வைக்கப்பட்டன.
படங்களை, உத்திரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் திராவிட முன் னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளரு மான க. சுந்தர், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் திராவிட முன்னேற்றக் கழ கத்தின் மாவட்ட துணைச் செயலாளருமான வழக்குரைஞர் க.செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினரும் திராவிட முன் னேற்றக் கழக மாநில மாணவரணிச் செய லாளருமான வழக்குரைஞர் சி.வி.எம்.பி. எழிலரசன், காஞ்சி மாநகர் மேயர் மகா லட்சுமி யுவராஜ், காஞ்சி மாநகர துணை மேயர் ஆர். குமரகுருநாதன், திராவிடர் கழகக் காப்பாளர் டி.ஏ.ஜி. அசோகன், காஞ்சி மாநகர திமுக செயலாளர் சி.கே.வி. தமிழ்ச்செல்வன்,உத்திரமேரூர் ஒன்றிய திமுக செயலாளர் கே. ஞானசேகரன், காஞ்சிபுரம் ஒன்றிய திமுக செயலாளர் பி.எம். குமார், மதிமுக காஞ்சி மாவட்ட செயலாளர் வளையாபதி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பாசறை செல்வராஜ், மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் மகேசு, ஓவியக்கவி நா. வீரமணி, பொதுவுடைமைக் கட்சி தோழர்கள் சி. சங்கர்,கமலநாதன், தமிழ் உரிமைக் கூட்டமைப்பு காஞ்சி அமுதன், சமூக நீதிச் செயல்பாட்டாளர் பெ. குமாரசாமி தோழர் ரவி பாரதி, கி. ஞான மூர்த்தி, ஏ. பரமேஸ்வரி அம்மாள் முதலி யோர் திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில், செய்யாறு கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வட மணப்பாக்கம் வெங்கட்ராமன், செய்யாறு நகர திராவிடர் கழகத் தலைவர் தி. காம ராசன், மாநில திராவிடர் கழக இளைஞரணி துணைச் செயலாளர் மு. அருண்குமார், காஞ்சிபுரம் மாவட்ட பகுத்தறிவாளர்கள் கழகச் செயலாளர் இளம்பரிதி, துணைத் தலைவர் பிரபாகரன், துணைச் செயலாளர் பெ. சின்னத்தம்பி, மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவர் வி. கோவிந்தராசு, மாவட்ட மகளிர் அணித்தோழர் ரேவதி, உஷா, அறிவரசி, ராஜலட்சுமி மோகன், அரக்கோணம் பெரியார்நேசன், பெரப்பேரி சங்கர், கார்த்தி, திமுக பகுதி செயலாளர்கள் தசரதன், திலகர், சு. வெங்கடேசன், சந்துரு, மண்டலக் குழு தலைவர் செவிலிமேடு எஸ். மோகன், மாவட்ட நெசவாளர் அணி மலர்மன்னன், மாமன்ற உறுப்பினர்கள் எம். சங்கர், சுரேஷ், பூங்கொடி தசரதன், காரை அருளானந்தம், திருகாளிமேடு எல்லப்பன், வட்டச் செயலாளர் சந்திரசேகர், மருத்துவர் ஆறுமுகம், மருத்துவர் சத்தியபிரியா, சண். கனக சபை, திருமலை, மக்கள் மன்ற தோழர்கள் ஜெசி, வழக்குரைஞர் உமா, கவிஞர் அமுதகீதன், மதிமுக மகேஷ், தமுஎகச கு. ஆறுமுகம், பாரதி விஜயன், சி. நடராசன், தீ. கோபாலகிருஷ்ணன், கவிஞர் கூரம் துரை, விசார் ஜெகந்நாதன் மற்றும் உறவினர்கள், நண்பர்கள், அனைத்துக் கட்சி தோழர்கள் பங்கேற்றனர்.
பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்று காஞ்சிபுரம் வருகைதந்த வீ.அன்புராஜ் அவர்களுக்கு மிலிட்டரி ரோடு அம்பேத்கர் சிலையருகில் தோழர்கள் முழக்கங்களிட்டு வரவேற்றனர்.
வழிநெடுகிலும் திராவிடர் கழகக் கொடிகளும் திராவிட முன்னேற்றக் கழகக் கொடிகளும் கட்டப்பட்டிருந்தன. மிலிட்டரி ரோடு பகுதியில் இல்லத் திறப்பு விழா புத்தெழுச்சியை உண்டாக்கியது.
பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் பங்கேற்ற ‘குறளகம்’ இல்லத் திறப்பு விழா! அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற கொள்கைத் திருவிழா!
Leave a Comment