‘மருத்துவத்தின் எதிர்காலம்’ மாநாடு 63,310 மருத்துவ மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை

2 Min Read

சென்னை,ஜன.26– தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் நடை பெற்ற ‘மருத்துவத்தின் எதிர்காலம்’ மாநாடு 63,310 மருத்துவ மாண வர்களுக்கு திறமையை வளர்த்து கொள்ள உதவியாக இருக்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மருத்துவத்தின் எதிர்காலம் குறித்து கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு சென்னை வர்த்தக மய்யத்தில் கடந்த ஜனவரி 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த மாநாட்டின் சிறப்பு குறித்து பேசுவதற்காக சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்பு கிண் டியில் உள்ள தமிழ்நாடு டாக் டர் எம்ஜிஆர் மருத்துவப் பல் கலைக் கழகத்தில் நடைபெற்றது.
அப்போது மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப் பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் மருத்துவ வர லாற்றில் முதன் முறையாகச் கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு வெற்றிகரமாக மூன்று நாட்கள் சிறப்பாக நடத்தப் பட்டுள்ளது.

இந்த மாநாட்டிற்காக மருத்து வத்தின் எதிர்காலம் என்னும் தலைப்பில், பல்வேறு மருத்துவ மாணவர்கள் மற்றும் விரிவுரை யாளர்கள் சமர்ப்பித்த 625 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் தொகுப்புகளும் (Eunioa) புத்தக மாக வெளியிடப்பட்டது.
கடந்த ஆண்டு நிதிநிலை அறிக் கையில் அறிவித்தது போல இந்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு நடைபெற்றதன் விளை வாக மருத்துவக் கல்லூரி சார்ந்த மொத்தம் 63,310 மாணவர்கள் எதிர்காலத்தில் தங்களது மருத்துவ திறமைகளை அதிகரித்து கொள்ள வும், ஆராய்ச்சித் திறனை வளப் பதற்கு உதவியாக இருக்கும்.
வழக்கமாக மருத்துவ மாநாடு ஏதாவது ஒரு மருத்துவத் துறையை சார்ந்து மட்டுமே நடைப்பெறும். ஆனால் முதல் முறையாக அனைத்து மருத்துவத் துறை இணைந்து நடந்த முதல் மாநாடு இது. குறிப்பாக இந்த மாநாட்டில் அமெரிக்கா உள்ளிட்ட 7 நாடு களில் இருந்து மருத்துவர்கள், நிபுணர்கள் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்ட மருத்துவர்கள் இந்த மாநாடு மற்றும் தமிழ்நாடு மருத்துவக் கட்டமைப்பு போன்று நாங்கள் வேறு எங்கையும் பார்த்த தில்லை என்று சொல்லிவிட்டு சென்றார்கள். மேலும், இம்மாநாட் டிலே பங்கேற்ற பல்வேறு நாடுக ளின் மருத்துவ வல்லுநர்களின் ஆராய்ச்சிக் குறிப்புகளும் தொகுத்து (Vision statement 2024) புத்தகமாக வும் வெளியிடப்பட்டது. இது மருத்துவ மாணவர்களுக்கு உதவி யாக இருக்கும்.

இந்த மாநாட்டில் 225 மருத் துவத்துறையில் புகழ் பெற்ற மருத் துவ வல்லுநர்களில் முதன் முறை யாக ஏழு நாடுகளில் (அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், கத்தார், ஆஸ்திரேலியா, கனடா) 28 பன் னாட்டு மருத்துவ புகழ்மிக்க பேச்சாளர்களும், 185 நமது இந்திய அளவிலும், 12 பேச்சாளர்கள் காணொலி வாயிலாகவும் பங் கேற்று பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றி இருக்கிறார்கள்.
அதுமட்டுமின்றி, இந்த மாநாட் டில் பதிவு செய்து பங்கேற்ற மாண வர்களுக்கு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்தின் சார்பில், 30 மதிப்பெண் புள்ளிகளும், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சார்பில், 6 புள்ளிகளும், பல்மருத்துவ கவுன்சில் சார்பில், 18 புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளதும் பாராட்டுக்குரிய ஒன்றாகும்.
மேலும் இது போன்ற மாநாடு இனி ஆண்டு தோறும் நடந்த திட்டமிடப்பட்டு உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *