சென்னை,ஜன.26- தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
2023-2024ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்தவாறு மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கக வேளாண்மையில் ஈடுபடுவதோடு பிற அங்கக விவசாயிகளுக்கும் கைகொடுக்கும் மூன்று அங்கக விவசாயிகளுக்கு சிறந்த அங்கக விவசாயிகளுக்கான “நம்மாழ்வார் விருதுடன்” பரிசுத்தொகை, சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவற்றை வழங்க மூன்று விவசாயிகள் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளார்கள்.
கோ.சித்தர், மகர் நோன்புச்சாவடி, தஞ்சாவூர் மாவட்டம் முதல்பரிசாக ரூ.2.50 லட்சம் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம், கே.வெ.பழனிச்சாமி, பொங்கலூர், திருப்பூர் மாவட்டம் இரண்டாம் பரிசாக ரூ.1.50 லட்சம் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் மற்றும் கு. எழிலன், அச்சுக்கட்டு கிராமம், காஞ்சிபுரம் மாவட்டம் மூன்றாம் பரிசாக ரூ.1.00 லட்சம் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட உள்ளது.
-இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுதான் முருகன் சக்தியோ!
தைப்பூச தேரோட்டத்தில் தேர் கவிழ்ந்தது!
கொண்டையம்பாளையம்,ஜன.26- ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கொண்டையம்பாளையம் கிராமத் தில் பொன்மலை ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திரு விழாவையொட்டி தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
வீதியில் உலா வந்த தேர் வளைவில் திரும்பும் போது, சாலையோரம் இருந்த குழியில் தேரின் சக்கரங்கள் இறங் கியதால் நிலைத்தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தேர் கவிழ்வதை பார்த்த பக்தர்கள் அலறியடித்து தங்களை காப்பாற்றிக் கொள்ள ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து, பொக்லைன் இயந்திரம் மூலம் தேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தேரோட்டத்தையொட்டி முன்னெச்சரிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.