பத்து சதவீதம் இட ஒதுக்கீட்டை எடுத்துக்கிட்டாங்களே மூணு சதவீதம் பேரு
பத்து சதவீதம் இட ஒதுக்கீட்டை எடுத்துக்கிட் டாங்களே மூணு சதவீதம் பேரு, அவங்கதான் எல்லாத் துறையிலயும் உயர்பதவிகள்ல்ல இருந் தாங்க..
நம்மாளுங்க நல்ல வசதியாக்கூட இருப்பான், ஆனா அந்த மூணுக்கு முன்னால கைகட்டி நிப்பான்
அய்ம்பதாண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்ல படி படின்னு சொல்லிச்சொல்லி நம்ம தலைமுறைய மேல கொண்டு வந்துட்டாங்க..
மாநில அரசுகளின் உயர்பதவிகள், மருத்துவம் உள்ளிட்ட துறைகள், விண்வெளி ஆய்வு உள்ளிட்ட தொழில்நுட்பத்துறைகள்,
உள்நாடு வெளிநாடு என தகவல் தொழில்நுட்பம் எல்லாத்துலயும் நம்ம புள்ளைங்க வந்துட்டாங்க..
ஒவ்வொரு கிராமத்துலயும் நாலுபேர் நல்ல வேலைல இருக்காங்க..
நாலுபேர் வெளிநாடுகள்ல்ல வேலைபாத்து வசதியா இருக்காங்க
திரைப்படம், பத்திரிகை, தொலைக்காட்சி என அவாள்கள் கோலோச்சிய துறையெங்கும் தலை மைப் பொறுப்புகள் வரைக்கும் நம்பிள்ளைகள்
“நான் பாத்த வேலைய நீ பாக்காதே,
என் உசுரைக் கொடுத்தாவது உன்னைப் படிக்க வெக்கறேன்..
படிச்சுக் கரையேறிக்க” என்பதுதான் தமிழ் நாட்டில் நம் தாய்தந்தையர் மனோநிலை
அதிகாரத்தை இழந்த 3% -க்கு இதைத் தாங்க முடியல, தடுக்க முடியல..
ஓடி ஜெயிக்கறது அவாளுக்குத் தெரியாது, அடுத்தவங்களை ஓடவிடாம பண்ணித்தான் ஜெயிப்பாங்க
வந்தேமாதரம் ரயில் வேகமாப் போகணும்ன்னா, வைகை எக்ஸ்பிரஸ், சேது எக்ஸ்பிரஸ் வேகத்தைக் கொறைக்கறதுதான் காலகாலமா அவாளுக்குத் தெரிஞ்ச சூட்சுமம்
அதன்படிதான் நம் பிள்ளைகளை குலத்தொழி லுக்குள்ள தள்ற விஸ்வகர்மா கல்வித்திட்டத்தைக் கொண்டு வர்றா.. வெளிநாட்ல இருக்கற நம்ம பிள்ளைகளை இங்க வந்து இயற்கை விவசாயம் பண்ணுங்கறா..
அடுத்த தலைமுறையை விதையிலேயே அழிக்கறதுக்கு இனிமே படிக்காதீங்கன்னு சொல்றா..
இதை நேரடியா அவங்களே வந்து சொன்னா பாதுகாபிஷேகம் பண்ணிடுவான்னு பயந்துண்டு
கூலிக்குக் கூவுற நம்மாளுங்கள வெச்சுக்கிட்டு
மாடு மேய்,சாணி அள்ளு,
சட்டிபானை செய், படிக்கப் போகாதேன்னு அடிச்சுவிடறாங்க
இது நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை சூனியமாக்கும் செயல்.. முன்னேறிய தமிழினத்தை அய்ம்பதாண்டுகள் பின்னால் இழுக்கும் ஈனச்செயல்..
படிக்கப்போகாதேன்னு சொல்வது யாராக இருந்தாலும்
அவர்கள் நம் பிள்ளைகளின் சோத்துல மண் ணள்ளிப் போடும்
தமிழின விரோதிதான்..
மறந்துவிடாதீர்கள்..
எதிரிகள் துரோகிகளைக் கொண்டே நம்மை வென்றிருக்கிறார்கள்!
– இயக்குநர் நடிகர் கவிதா பாரதியின் முகநூல் பதிவு