26.1.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
♦ இந்தியா கூட்டணியின் எதிர்காலம் காங்கிரசின் அணுகுமுறையில் உள்ளது என்கிறது தலையங்க செய்தி.
♦ ‘‘பா.ஜ. மற்றும் ஆர்.எஸ்.எஸ். நாடு முழுவதும் வெறுப்பு மற்றும் வன்முறையை பரப்பி வருகின்றது. நாடு முழுவதும் அநீதி நிலவி வருவதால் நடைப்பயணத்தில் நீதி என்ற வார்த்தை இணைக்கப்பட்டுள்ளது. நாடு முழு வதும் அநீதிக்கு எதிராக இந்தியா கூட்டணி போராடும்” என்றார் ராகுல். ராகுல்காந்தி தலைமையிலான நீதி நடைப் பயணம் நேற்று மேற்கு வங்கத்தின் கூச் பீகார் மாவட்டத்தை வந்தடைந்தது. இதனை தொடர்ந்து நடைப்பயணத்துக்கு இரண்டு நாள் ஓய்வு விடப்பட்டு ராகுல்காந்தி சிறப்பு விமானம் மூலமாக டில்லி புறப்பட்டு சென்றார். 28ஆம் தேதி நடைப்பயணம் மீண்டும் தொடங்குகிறது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦ மக்களவைத் தேர்தலுக்கு காகித வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யலாமா வேண்டாமா என்ற விவாதத்திற்கு நேரம் முடிந்துவிட்டது என்கிறார் காங்கிரஸ் கட்சியின் அயலகத் தலைவர் சாம் பிட்ரோடா.
♦ ராமாயணக் கதைகள் குறித்த கருத்துகள் தொடர்பாக சமாஜ்வாடி கட்சியின் முக்கிய தலைவர் சுவாமி பிரசாத் மவுரியா மீதான குற்றவியல் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை. விதித்துள்ளது, “இது ஒரு விளக்கம். எளிய மற்றும் எளிமையானது” மற்றும் “இது எப்படி குற்றமாகும்?” என நீதிபதி மேத்தா கருத்து. மவுரியாவின் கருத்துகளைத் தொடர்ந்து புனித நூலின் பிரதிகள் எரிக்கப்பட்டதாக அரசு சுட்டிக்காட்டிய போதிலும், நீதிபதி மேத்தா, “அதற்கு அவர் பொறுப்பேற்க முடியாது. இது ஒரு சிந்தனை வரி.” என பதிலடி.
♦ பாரத ரத்னா கர்ப்பூரி தாக்குருக்கு அளிக்கப்பட்ட உரிய கவுரவம். ஆனால் மோடி அரசாங்கம் தாக்கூரின் கொள்கையைப் பின்பற்றி, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒரு குறிப்பிட்ட ஒதுக்கீட்டை அறிமுகப் படுத்துமா? இது ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை இன்னும் அவசியமாக்கும் சீர்திருத்தம்? என பேராசிரியர் கிறிஸ்டபி ஜாப்ரலெட் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
தி டெலிகிராப்:
♦ கடவுள்களின் படத்தை காண்பிப்பதனால் ஏழைகளின் வயிற்றை நிரப்ப முடியாது. நாட்டில் பணவீக்கம் தினமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மக்கள் பலர் வேலை இல்லாமல் உள்ளனர். நெருக்கடிகள் ஏற்படும் போது பாகிஸ்தான்,சீனா மற்றும் கடவுள்களின் பெயர்கள் உள்பட பல சாக்குபோக்குகளை மோடி சொல்வார். இதற்கு முன் பல உத்தரவாதங்களை அளித்துள்ள மோடி இதுவரை நிறைவேற்றவில்லை. எனவே மோடியின் வலையில் யாரும் விழுந்து விடாதீர்கள்’’ என காங்கிரஸ் தலைவர் மல்லிகார் ஜூனா கார்கே எச்சரிக்கை.
– குடந்தை கருணா