தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள் பேச்சு!
சென்னை, அக். 13- “ஊக்கமும் ஒழுக்கமும் இருக்கக்கூடிய மாணவர்கள் நிச்சயம் வெற்றி பெற முடியும்” என்று சென்னை யில் சிறீராம் இலக்கிய கழகம் நடத்திய திருக்குறள் விழாவில், தமிழ் வளர்ச்சித் துறை இயக் குநர் முனைவர் ந. அருள் மாணவர்களிடையே பேசினார்.
தமிழ் வளர்ச்சித் துறை தமிழ்நாடு முழுவதும் திருக் குறள் போட்டிகளை மாணவர் களுக்காக நடத்தி வருகிறது. இதில் ஒரு பகுதியாக சென்னை யில், அண்ணா நகரில் உள்ள ஜெஸ்ஸி மோசஸ் பள்ளியில் இந்தப் போட்டிகள் அண்மை யில் நடைபெற்றன. இதில் சென்னை, திருவள்ளூர், செங் கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட் டங்களில் உள்ள பள்ளி – கல்லூ ரிகளைச் சேர்ந்த 906 மாணவர் கள் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்ற மாணவர் களுக்குப் பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றிய தமிழ் வளர்ச் சித் துறை இயக்குனர் முனைவர் ந. அருள் பேசுகையில், “மாண வர்கள் தொடர்ந்து அதிக எண் ணிக்கையில் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். ‘ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும்’ என்ற குறளில், வள்ளுவர் சோர்வு இல்லாமல் ஊக்கம் கொண்டவர் இடத்தில், ஆக்கம் தானே வழி தேடிச் செல்லும் என்கிறார். அதுபோல் ‘ஒழுக்கம் விழுப்பம் தரலான்’ என்ற குறளில் உயிரை விட மேலாகப் போற்றப்பட வேண் டியது, ஒழுக்கம் என்கிறார்.
இத்தகைய நல்ல கருத்துக் களைக் கொண்ட திருக்குறளை அப்படியே மனப்பாடம் செய்து 1330 குறள்களையும் ஒப்பிப் போருக்கு, தமிழ்நாடு அரசு பதி னைந்தாயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கி வருகிறது. ‘எவ்வ ளவு மாணவர்கள் ஒப்பித்தாலும் அவ்வளவு மாணவர்களுக்கும் இந்தப் பரிசுத் தொகை வழங்கப் படும்’ என்று தமிழ்நாடு முதல மைச்சர் அறிவித்திருக்கிறார். மாணவர்கள் இந்த அரிய வாய்ப் பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். இந்த நிகழ்ச் சியில் சிறீராம் சிட்ஸ் நிறுவனத் தின் மூத்த அதிகாரிகள் ஜார்ஜ் ஸ்டீபன் மற்றும் புகழேந்தி ஆகி யோர் கலந்து கொண்டனர்.