சென்னை, ஜன.25- கிளாம் பாக்கத்தில் மெட்ரோ ரெயில் நிலையம் அமைப்பது தொடர்பாக மெட்ரோ ரெயில்வே மேலாண்மை இயக்குநர் தகவல் தெரிவித் துள்ளார்.
சென்னையில் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண் ணிக்கை அதிகரித்து கொண்டு வரு கிறது. மின்சார ரெயில்களுக்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு மெட்ரோ ரயில்வே வேகமாக வளர்ந்துகொண்டு வருகிறது. மெட்ரோ ரயிலில் பயணிக் கும் பயணிகள் வேறு ரயில் களில் பயணிக்காத அளவுக்கு மெட்ரோ ரெயில் சேவை இருந்து வருகிறது. எனவே, மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளை ஈர்க்கும் வகை யில், பயணிகள் அட்டை திட்டம் மூலம் பயணச்சீட்டு பெற்றால் 20 சதவீதம் சலுகை, ரூ.2 ஆயிரத்து 500-ல் மாத பயணம், 20-க்கும் மேற்பட் டோர் பயணித்தால் குழு பயணச்சீட்டுகள் என பல் வேறு சலுகைகளை அறிமுகம் செய்துள்ளது. இதனால், மெட்ரோவில் பயணிப்போ ரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
அந்தவகையில், மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு விற்பனை செய் யும் கவுண்ட்டர்களில் பய ணச்சீட்டு வாங்கும் பயணிகள், மின்னணு பயணச்சீட்டுகள் பயன்படுத்துவதை ஊக்கு விக்கும் விதமாக, கவுண்ட்டர் களில் வாட்ஸ்அப் மூலம் கியூ ஆர்-கோடு பயணச் சீட்டு பெறுவதற்கான புதிய வசதி யானது கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள வளாகத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் நேற்று (24.1.2024) அறிமுகப்படுத்தினார்.
மெட்ரோ ரயில் நிலை யங்களில் வாட்ஸ்அப் மூலம் பயணச்சீட்டு பெறுவதற்கான வழிமுறைகள் பின்வருமாறு:-
மெட்ரோ ரயில் நிலை யங்களில் உள்ள பயணச் சீட்டு பெறும் கவுண்ட்டருக்கு சென்று, சேருமிடம், பயணச் சீட்டுகளின் எண்ணிக்கை குறித்து கவுண்ட்டரில் உள்ள ஆப்ரேட்டரிடம் தெரிவிக்க வேண்டும். அதன்பின், கவுண்ட் டர்களில் நிறுவப்பட்டுள்ள இபேட் மூலம் வாட்ஸ்அப் எண்ணை உள்ளிட வேண்டும். அதன் மூலம் மெட்ரோ ரயில் நிலையத்தின் அதிகாரப்பூர்வ எண்ணிலிருந்து உங்கள் வாட்ஸ்அப் எண்ணிற்கு பயணச்சீட்டை பெறலாம்.
விரிவான திட்ட அறிக்கை
பின்னர், மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:-
காகித பயன்பாட்டைக் குறைத்து பசுமையான சூழலை மேம்படுத்துவதற்காக டிஜிட்டல் முறைகளை ஊக்குவிக்கின்றோம்.
அந்தவகையில், வாட்ஸ் அப், போன்-பே, பே.டி.எம். உள்ளிட்ட பல்வேறு செய லிகள் மூலம் மெட்ரோ ரயிலுக்கான பயணச்சீட்டு பெறும் வசதிகள் ஏற்கெனவே உள்ளது.
இதன் தொடர்ச்சியாக, வாட்ஸ்அப் மூலம் பய ணச்சீட்டு பெறும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள் ளது. மேலும், சென்னையில் உள்ள 41 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் செயல்பட தொடங்கியுள்ளது. இந்த பரிவர்த்தனை செய்வதால் பயணிகள் யாருடைய அலை பேசி எண்ணும் மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் சேமிக் கப்படாது.
சிறீபெரும்புதூர்_- பரந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவைக்கான சாத்தியக்கூறு அறிக்கையும்,கிளாம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் சேவைக்கான விரிவான திட்ட அறிக்கையும் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் அரசிடம் இருந்து ஒப்புதல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி, ஆலோ சகர் மனோகரன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.