அமெரிக்காவின் ‘நாசா’ 1999 செப். 11இல் ‘101955 பென்னு’ விண்கல்லை கண்டுபிடித்தது. விட்டம் 1610 அடி. இது 2182இல் பூமியை தாக்கும் வாய்ப்புள்ளது என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இதனால் இந்த விண்கல் பாறை, மண் மாதிரியை ஆய்வு செய்ய 2018இல் நாசா’ அனுப்பிய ‘ஆசிரிஸ்-ரெக்ஸ்’ விண்கலம் 2020இல் ‘பென்னு’ விண்கல்லில் தரையிறங்கியது. மண், பாறை மாதிரி அடங்கிய கேப்சூலை எடுத்துக்கொண்டு 2023 செப்டம்பரில் பூமியை வந்தடைந்தது. மூன்று மாத முயற்சிக்குப்பின் சமீபத்தில் இந்த கேப்சூலை திறந்து மாதிரியை ஆய்வுக்கு எடுத்தனர்.