25.1.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
* அசாம் முதலமைச்சர் ஹேமந்த், தடைகளை உருவாக்குவதன் மூலம், ராகுல் பயணத்திற்கு நாடு தழுவிய அளவில் விளம்பரம் கிடைத்துள்ளது என்கிறது தலையங்க செய்தி.
டெக்கான் கிரானிக்கல் சென்னை
* அலங்காநல்லூர் அருகே ரூ.62.77 கோடியில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்ட ஏறுதழுவுதல் அரங்கம் திறப்பு: ஜாதிப் பிளவுகளும், மத வேறுபாடுகளும், தமிழர் ஒற்றுமையை சிதைப்பதற்காக பிற்காலத்தில் உருவாக்கப்பட்டவை என்பதை உணர்ந்து, தமிழர் என்ற நமது அடையாளத்தோடு இதுபோன்ற பண்பாட்டுத் திருவிழாக்களை ஒற்றுமை யாக நடத்துவோம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
* கர்ப்பூரி தாக்குருக்கு “பாரத ரத்னா” வழங்குவதற்கான முடிவை “அரசியல்” நடவடிக்கை” என்று கூறிய காங்கிரஸ், சமூக நீதியை நிலைநாட்டுவதில் மோடி நேர்மையாக இருந்திருந்தால், ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அவர் அலட்சியப்படுத்திருக்க மாட்டார். ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு சோசலிஸ்ட் தலைவருக்கு உண்மையான மரியாதையாக இருக்கும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
* ஒன்றிய புலனாய்வு அமைப்புகளால் தாக்கல் செய்யப்பட்ட 95 சதவீத வழக்குகள் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக உள்ளன.
* விசாரணை நிறுவனங்களை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்துவதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) எம்.பி., சுப்ரியா சுலே குற்றச்சாட்டு.
டைம்ஸ் ஆப் இந்தியா
* மனுஸ்மிருதியை மேற்கோள் காட்டி, மனைவி தனது கணவரின் குடும்பத்தில் உள்ள வயதானவர் களுக்கு சேவை செய்வதை இந்திய கலாச்சாரம் “கடமை” ஆக்குகிறது, மேலும் “தனியாக வாழ நியாயமற்ற கோரிக்கை” எதுவும் செய்யக்கூடாது எனக் கூறி, மனைவியின் பராமரிப்பை நிராகரித்தார் ஜார்கண்ட் நீதிபதி சுபாஷ் சந்த்.
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a Comment