தொடர்ந்து ரயில் விபத்துக்கள் நடந்துகொண்டு இருக்கின்றன. இதற்கு பராமரிக்கப்படாத ரயில் தண்டவாளங்கள் என்ற அறிக்கை மீண்டும் மீண்டும் கொடுக்கப்படுகிறது. ஆனால் வந்தே பாரத்திற்காக அனைத்து ரயில்களின் பாதுகாப்பும் புறக்கணிக்கப்படுகிறது. இதனால் ரயில் விபத்துக்கள் தொடர் கதையாக உள்ளது.
11.10.2023 அன்று உத்தரப்பிரதேசம் – பீகார் எல்லை நகரமான பக்சரில் நடந்த ரயில் விபத்தில் 4 பேர் இறந்தனர். பலர் படுகாயமடைந்தனர். உதவி கிடைக் காமல் மக்கள் தவித்துக்கொண்டு இருந்தனர். இதற்கு ஒன்றிய அரசே முழுக் காரணமாகும்.
ஆனால், மோடியோ உத்தராகண்ட் மாநிலத்தில் பூஜை செய்து கொண்டு சங்கு ஊதிக்கொண்டு உடுக்கை அடித்துக்கொண்டு இருக்கிறார்.