வழக்கம் போல இந்த ஆண்டும் கலை, விளையாட்டு, தொண்டு எனப் பல துறை களிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளை ஞர்கள் அசத்தியுள்ளனர். அந்த வகையில் விடை பெறும் 2023இல் கவனம் ஈர்த்த சிலர்:
முத்தமிழ்செல்வி
விருதுநகர் மாவட்டம் காரியா பட்டி அருகே உள்ள ஜோகில்பட்டியைச் சேர்ந்த 34 வயதான முத்தமிழ்செல்வி இமாலய சாதனை யைப் படைத்தார்.
ஆம், உலகிலேயே மிக உயர்ந்த சிகரமான 8,850 மீட்டர் உயரமுள்ள எவ ரெஸ்ட்டை எட்டிய பெண் என்கிற சாத னைக்குச் சொந்தக்காரர் ஆனார்.
இந்தச் சாதனையை அடைந்த முதல் தமிழ்ப் பெண் இவர். கடினமான சாகச விளையாட்டாகக் கருதப்படும் மலை யேற்றத்தை மேற்கொள்ள தொடர் பயிற்சி களை மேற் கொண்டு, தடைகளைத் தாண்டி இந்த ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தை எட்டினார் முத்தமிழ் செல்வி.
கிரீஷ்மா
தமிழ்நாட்டைச் சேர்ந்த வழக்குரைஞர், சுயாதீன பத்திரிகை யாளர் கிரீஷ்மா குதர். களத்துக்குச் சென்று செய்திகளைச் சேக ரித்து உண்மையை உலகுக்குச் சொல்ல முனைபவர். இந்தியாவை உலுக்கிய மணிப்பூர் கலவரத்தை நேரில் சென்று ஆவணப்படுத்தி செய்திகளை வழங்கினார். பாகுபாடற்ற இவருடைய எழுத்து தனி அடையாளமானது. இதழியல் துறையில் இளம் பெண் பத்திரிகையாளராக மிளிர்கிறார் கிரீஷ்மா.
வித்யா ராம்ராஜ்
கோவையைச் சேர்ந்த 25 வயதான தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் தமிழ் நாட்டுக்குப் பெருமையைத் தேடித் தந்தார். 2023இல் சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் மூன்று பதக் கங்களை வென்று சாதனை படைத்தார் இவர்.
400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கலம், மகளிர் 4ஜ்100 மீட்டர் தொடர் ஓட்டத்திலும், கலப்பு 4ஜ்100 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்தினார்.
தடை தாண்டும் ஓட்டத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டியில், 55:42 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்த வித்யா, இந்தி யாவின் ‘தங்க மங்கை’ பி.டி உஷாவின் 39 ஆண்டு கால தேசிய சாதனையைச் சமன் செய்தும் கவனிக்க வைத்தார்.
தன்னார்வலர்கள்
2023 டிசம்பரில் மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட் டங்கள் அதி கன மழையால் பாதிக்கப் பட்டன. திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை, வெள்ளத்தைச் சந்தித்தன. இந்த இயற்கைப் பேரிடர்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. உயிர், பொருள் இழப்புகளால் உதவிகளை எதிர்ப்பார்த் திருந்த மக்களுக்கு இளைய தலைமுறையினர் ஆதரவு கரம் நீட்டினர். 2015 சென்னை வெள்ளத்தின்போது இயங்கியது போலவே களத்தில் இறங்கிய தன்னார்வலர்கள் இணைய தளத்தை ஆக்க பூர்வமாகப் பயன்படுத்தி உதவிகளை ஒருங்கிணைத் தனர். இளைய தலைமுறையின் இந்த மனிதநேய மிக்க செயல்கள் துயர்மிகு காலத்தில் மனிதத்தை மீட்டெடுக்க உதவின.
பவானி தேவி
சென்னையைச் சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனையான 28 வயதான பவானி தேவி, இந்த ஆண்டு ஜூனில் சீனாவில் நடைபெற்ற ஆசிய வாள்வீச்சு வாகையர் பட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதேபோல கோவாவில் நடை பெற்ற 37ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான வாள் வீச்சில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். பாரீஸ் ஒலிம்பிக் தொடருக்குத் தகுதிபெற வெளி நாடுகளில் தீவிரப் பயிற்சி மேற்கொண் டிருக்கும் அவர், தன் மீதான எதிர்ப்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தி யிருக்கிறார்.
சாதித்த இளைஞர்கள்!
Leave a Comment